Sunday, June 12, 2011

சான் ஏறினால் முழம் சறுக்குது சந்தை!!!

          கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையுடன் தொடர்புடையவர்கள் சொல்லும் வார்த்தையே சான் ஏறினால் முழம் சறுக்குது. NIFTY5600 என்ற அதன் முக்கிய RESISTANCE புள்ளிக்கு அருகில் சென்று அங்கிருந்து U TURN அடித்து திரும்பி வந்துக்கொண்டுள்ளது. அதற்கு பலகாரணங்களை சொல்லலாம், பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது, IIP DATA மிகவும் குறைந்து வந்துள்ளது, மேலும் அமெரிக்க சந்தை மிகவும் பலவீனமாக உள்ளது என்று கெட்ட செய்திக்கு தற்பொழுது பஞ்சமில்லை. வெள்ளிக்கிழமையும் அமெரிக்க சந்தை பெருமளவு சரிந்துள்ளது. எனவே வரும் வாரத்திலும் நமது சந்தை இறக்கதுடனே தொடங்கும். தற்பொழுது NIFTYக்கு 5400 புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது இந்த வாரத்தில் இந்தப்புள்ளி உடைப்பட்டால் NIFTY 5200 வரை மீண்டும் சரிய வாய்ப்புள்ளது, மாறாக 5400 புள்ளி இந்தவாரம் CLOSING BASIS முறையில் உடைபடவில்லை என்றால் மீண்டும் 5600 நோக்கி NIFTY தனது பயணத்தை தொடரலாம்.

          மேல்சொன்ன வர்த்தக ஆலோசனைகள் TECHNICALS அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் இருப்பினும் தெரிந்தவற்றை APPLY செய்ய தயக்கம் மற்றும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில் வரும் பரிந்துரைகளால் கவனம் சிதறுதல் போன்றவற்றால் நஷ்டம் அடையாமல் இறங்கும் சந்தையிலும் சம்பாதிக்க உணர்சிகளுக்கு இடமளிக்காதீர்கள் உங்கள் புத்தியின் சொல்படி கேளுங்கள் லாபம் நிச்சயம்.

1 comment:

BABU said...

YESSSSSSSSSSSSSSSSSSSSSSSS, U ARE A JENIUS