Sunday, January 31, 2010

          கடந்த வாரம் நான் எந்தப் பங்கையும் பரிந்துரைக்கவில்லை. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு INDIANB. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசுத்துறை வங்கியாகும். இதன் பங்கில் SYMMETRICAL TRIANGLE BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது INDIANB 180 என்றப்புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 190-200ம் உள்ளது. STOPLOSS 170 என்றப்புள்ளியை CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். கடந்த வாரத்தில் சந்தை பெருமளவு இறங்கியப்பொழுதும் INDIANB பங்கானது ஏற்றம் கண்டுள்ளது. எனவே வரும் வாரத்தில் இந்தப்பங்கு நிச்சயம் அதன் இலக்குகளை அடையும் என்பது என் கருத்து. இதன் CHARTஐ கீழே காணலாம்.

  

          கடந்த வாரத்தில் NIFTY 154 புள்ளிகள் சரிந்து 4882.05 என்ற புள்ளியிலும், SENSEX 502 புள்ளிகள் குறைந்து 16358 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று RBI CRR விகிதத்தை 0.75 BPS உயர்த்தியது. அமெரிக்க GDP வளர்ச்சிவிகிதமானது எதிர்ப்பார்பிற்கு மிஞ்சி 5.7% என்று வெளிவந்தாலும் NASDAQ மற்றும் DOW சந்தையானது சரிவடைந்தது. நம் நாட்டு பெரும்பான்மையான நிறுவனங்கள் நல்ல Q3 RESULTS தந்துள்ளது, BUDGET எதிர்ப்பார்ப்பும் அதிகமாகியுள்ளது, எனவே வரும் வாரத்தில் வேறு எந்த கெட்ட செய்தியும் இல்லை என்றால் இறக்கங்களை முதலீடுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் பலன் நிச்சயம் உண்டு.

Friday, January 29, 2010

          இன்று மிகவும் VOLATILEலுடன் இருந்த நமது சந்தை இறுதியில் ஏற்றத்தில் முடிந்தது. NIFTY 15 புள்ளிகள் உயர்ந்து 4882 என்ற புள்ளியளும், SENSEX 51 புள்ளிகள் உயர்ந்து 16358 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்றும் NIFTY SUPPORT மற்றும் RESISTANCEல் மாற்றம் எதுவும் இல்லை. இன்று RBIயின் MONETARY POLICY வெளியிடப்பட உள்ளது எனவே சந்தை மிகவும் VOLATILEலுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 4800 என்ற தடுப்பு உடையாத வரை சந்தையில் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யலாம். குறைந்த VOLUMEல் வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INDIANB ABOVE 181 TGT 184-187

SELL INDIANB BELOW 175 TGT 173-171


BUY  IDFC ABOVE 150 TGT 153-156

SELL IDFC BELOW 148 TGT 145-142

Thursday, January 28, 2010

              இன்று GAPUPல் துவங்கிய நமது சந்தை இறுதியில் FLAT ஆக முடிந்தது. NIFTY 14 புள்ளிகளும், SENSEX 17 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது.

          இன்று NIFTY SUPPORT 4800-4750 என்ற புள்ளியிலும், RESISTANCE 4930-5000 என்ற புள்ளியிலும் உள்ளதாக தெரிகிறது. 4800 என்ற புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டால் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சி நிச்சயம் உள்ளது. கவனித்து வர்த்தகம் செய்யவும், தினவர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது, மாறாக குறைந்த அளவில் முதலீடைத் தொடரலாம். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Wednesday, January 27, 2010

          இன்று நமது சந்தை பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. NIFTY 155 புள்ளிகள் சரிந்து 4853 என்ற புள்ளியிலும் SENSEX 490 புள்ளிகள் சரிந்து16290 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.


          இன்றும் NIFTYக்கு 4950-4800 SUPPORT புள்ளிகளாகவும், 5050-5150 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள்.


இன்றைய பரிந்துரை

BUY  HINDUNILVR ABOVE 265 TGT 268-271

SELL HINDUNILVR BELOW 261 TGT 258-255

Tuesday, January 26, 2010


                       நண்பர்கள் அனைவருக்கும்  என் குடியரசு தின வாழ்த்துக்கள்

Monday, January 25, 2010

         இன்று NIFTY 28 குறைந்து 5008 என்ற புள்ளியிலும், SENSEX 79 புள்ளிகள் குறைந்து 16780 புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 5050-5150 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. 4800 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக பார்க்கப்படுகிறது, இந்தப்புள்ளி நல்ல சக்தியுடன் உடைந்தால் நமது சந்தைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி நிச்சயம் உண்டு. சில முக்கிய INDEX பங்குகளின் 200 DMA உடைபடும் நிலையில் உள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தின வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. கீழே CHARTஐ காணலாம். இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன.

Sunday, January 24, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான PUNJLLOYD அதன் BUY ABOVEவான 225 என்ற புள்ளியை தொடவில்லை, கடந்த வாரம் PUNJLLOYDஇன் உச்ச விலை 221.35 ஆகும். இந்த வாரம் நான் எந்த பங்கையும் பரிந்துரை செய்யப்போவதில்லை.

          கடந்த வாரத்தில் NIFTY 216 புள்ளிகள் இழந்து 5036 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நமது சந்தை சரிந்ததன் முக்கிய காரணம் அமெரிக்க பங்குச்சந்தை ஆகும். அந்நாட்டின் அதிபர் OBAMA அறிவித்த சில புதிய வங்கிக் கொள்கைகள் சந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தன. வெள்ளிக்கிழமையன்றும் NASDAQ சந்தையானது மிகப்பெரிய சரிவையே கண்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது நம்நாட்டில் எந்த கெட்ட செய்தியும் இல்லை, இந்த சமயத்தில் நமது சந்தையும் உலக சந்தைக்கு ஏற்ப சரிகிறது. இந்த தருணத்தை சிறந்த முதலீடு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். திங்கட்கிழமை எப்படியும் சரிவுடனே நமது சந்தை துவங்கும். நாம் சிறிது சிறிதாக பங்குகளை வாங்க தொடங்கலாம். நாம் வாங்க நினைக்கும் பங்குகளின் அளவை  4 பகுதிகளாக பிரித்து தற்பொழுது ஒரு பகுதியை வாங்கலாம். பிறகு ஒவ்வொரு சரிவிலும் முதலீடை தொடரலாம். இவ்வாறு செய்யும்பொழுது மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்படுவதோடு மட்டும்மல்லாமல் 2 அல்லது 3 மதங்களில் மிகப்பெரிய லாபம் அடைய வாய்ப்பு நிச்சயம் உள்ளது.

          RSI என்பது ஒரு பங்கு OVERBOUGHTல் உள்ளதா அல்லது OVERSOLDல் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு அளவுகோல் ஆகும். சிலர் இதை 30லிருந்து  70 வரையும் சிலர் 40லிருந்து 80 வரையும் கணக்கிடுகின்றனர். அதாவது 30 அல்லது 40க்கு கீழ் ஒரு பங்கின் RSI இருந்தால் OVERSOLDலும், 70லிருந்து 80க்கு மேல் ஒரு பங்கின் RSI இருந்தால் OVERBOUGHTலும் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் TECHNICALS அறிந்திருந்தால் இவைகளை நீங்களே கண்டுபிடித்து முதலீடு செய்யலாம்.



          உங்கள் கவனத்திற்காக  சில தரம் வாய்ந்த A GROUP பங்குகளின் தற்பொழுதைய RELATIVE STRENGTH INDEX (RSI)ஐ கீழே கொடுத்துள்ளேன்.

LT 19, SBIN 31, ONGC 33, TATAPOWER 34, PUNJLLOYD 30, RANBAXY 31, SUZLON 36, UNITECH 36, DLF 38, IDBI 36, IOB 38, IVRCLINFRA 33, GMRINFRA 32, HCC 38, IBREALEST 33, JPASSOCIAT 40, JINDALSTEL 40, HDFC 27, RELINFRA 36, IDFC 38, BPCL 33, UNIPHOS 40.

           கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்பவர்கள் என்றும் நஷ்டத்தை மட்டுமே  அடைகிறார்கள். பொறுமையாகவும், TECHNICALS அறிந்தும் வர்த்தகம் அல்லது முதலீடு செய்பவர்கள் என்றும் லாபத்தையே அடைகிறார்கள். பணத்தின் மதிப்பை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள். நீங்கள் TECHNICALS அறிந்து கொண்டால் மட்டுமே அதிக லாபம், மிகக்குறைந்த நஷ்டம் அடைய முடியும். எங்கோ இருந்து வரும் SMS, மின்னஞ்சல் செய்தியால் உங்களுக்கு என்றும் லாபம் வராது என்பது என் திடமான கருத்து. அது உண்மையும் கூட. நிறைய வர்த்தக செய்திகளை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள், அதன் அடிப்படையில் மட்டுமே உங்கள் முடிவை நீங்களே எடுங்கள், நிச்சயம் உங்களுக்கு லாபம் வரும் வாழ்த்துக்கள்.

Friday, January 22, 2010

          இன்று NIFTY 58 புள்ளிகள் சரிந்து 5036 என்ற புள்ளியிலும், SENSEX 191 புள்ளிகள் சரிந்து 16860 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.


          நான் கடந்த 3 நாட்களாகவே நமது சந்தைக்கு பெரும் இறக்கம் உள்ளது என்று எச்சரித்து வந்தேன் அது நேற்று நடந்தும்விட்டது. இறக்கங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். இன்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் RELIANCE INDUSTRY Q3 RESULT வெளியாக உள்ளது. எனவே சந்தை மிகவும் VOLATILEலுடன் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று ஒரு நாள் TRADE செய்யாமல் இருப்பது நல்லது. சில முக்கிய பங்குகளில் BEARISH BREAKOUT நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. TECHNICALS அறிந்தவர்கள் தாங்கள் இழப்பதை விட அதிகமாக லாபம் ஈட்டுகிறார்கள். நான் மீண்டும் சொல்வது விற்று வாங்க பழகிக்கொள்ளுங்கள், TECHNICALS அறிந்து மட்டுமே வர்த்தகம் செய்யுங்கள். உங்களிடம் உள்ள பணத்திற்கு மட்டும் வர்த்தகம் செய்யுங்கள்.

          இன்று NIFTYக்கு 5160-5200 என்பவை RESISTANCE புள்ளிகளாகவும், 5067-5000 என்பவை SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. இன்று பரிந்துரைகளை தவிர்க்க விரும்புகிறேன்.

Thursday, January 21, 2010

          இன்று நமது சந்தை பெரும் சரிவை சந்தித்தது NIFTY 128 புள்ளிகள் குறைந்து 5094 என்ற புள்ளியிலும், SENSEX 423 புள்ளிகள் குறைந்து 17051 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.

          இன்று NIFTYகு 5250-5298 RESISTANCE புள்ளிகளாகவும், 5200-5180 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. சந்தை மிகுந்த VOLATILEலுடன் உள்ளதால் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். BANK OF AMERICA Q4ல் எதிர் பார்த்ததை விட அதிக நட்டம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அது NASDAQ சந்தையில் நன்கு எதிரொலிக்கிறது.

இன்றைய பரிந்துரை

BUY  TATASTEEL ABOVE 658 TGT 662-676

SELL TATASTEEL BELOW 646 TGT 640-634

Wednesday, January 20, 2010

          GAPUPல் துவங்கிய நமது சந்தை இறுதியில் இறக்கத்தில் முடிவடைந்தது. NIFTY 4 புள்ளிகள் குறைந்து 5222 என்ற புள்ளியிலும், சென்செக்ஸ் 12 புள்ளிகள் குறைந்து 17474 என்ற புள்ளியிலும் முடிவடைந்தது.

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. 5200-5300 என்ற புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்யாதீர்கள் பங்குகளின் SUPPORT புள்ளி உடையும் பட்சத்தில் விற்று வாங்கவும் பழகுங்கள். NIFTY வரும் நாட்களில் 5300 என்ற புள்ளியை தாண்டி முடியவில்லை என்றால் நமது சந்தைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் புதிய முதலீடைத் தவிர்க்கவும். கையிலிருக்கும் பங்குகளின் ஒரு பகுதி லாபத்தை கண்டிப்பாக வெளியே எடுக்கவும். கையில் பணத்துடன் காத்திருக்கவும் உங்கள் விருப்பப் பங்குகள் மிகவும் மலிவாகக் கிடைக்கும், பங்குகளை துரத்திச்சென்று வாங்கவேண்டாம்..

இன்றைய பரிந்துரை

BUY  ANDHRABANK ABOVE 113 TGT 115-116

SELL ANDHRABANK BELOW 111 TGT 109

Tuesday, January 19, 2010

          இன்று NIFTY 49 புள்ளிகள் குறைந்து 5226 என்ற புள்ளியிலும், SENSEX 155 புள்ளிகள் குறைந்து 17486 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

             நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது. இதில் TECHNICALS மிகச்சரியாக வேலை செய்வதில்லை எனவே இன்று நான் பரிந்துரைகள் எதுவும் செய்யவில்லை. NIFTY 5200-5300 இந்த புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. கவனித்து TRADE செய்யவும்.

Monday, January 18, 2010

          இன்று NIFTYக்கு 5298-5355 RESISTANCE புள்ளிகளாகவும், 5200-5160 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கடந்த மூன்று வாரங்களாகவே நமது சந்தைகள் பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளன. எனவே இறக்கங்களில் வாங்கியும் ஏற்றங்களில் விற்றும் லாபம் ஈட்ட முயற்சிசெய்யுங்கள். நிதானமாக கவனித்தும், TECHNICALS அறிந்தும் மட்டுமே வர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ITC ABOVE 254 TGT 257-260

SELL ITC BELOW 251 TGT 249-247


BUY  NAGARFERT ABOVE 37 TGT 38-39

SELL NAGARFERT BELOW 36 TGT 35-34

Sunday, January 17, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த APTECHT பங்கானது அதன் BUY ABOVEவான 210 என்ற புள்ளியை தொடவில்லை. கடந்த வார APTECHTஇன் உச்ச விலை 205.80 ஆகும். இந்த வாரம் நான் கொடுக்க இருக்கும் பங்கு PUNJLLOYD ஆகும். INFRASTRUCTURE துறையில் உள்ள தரமான பங்குகளில் ஒன்று. இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. 225 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 237-256 உள்ளன. STOPLOSS 210 என்பது CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீடுக்கும் ஏற்ற மிகவும் தரம்வாய்ந்த பங்கு PUNJLLOYD. இதன் CHARTஐ கீழே காணலாம். முக்கியமாக LIMITED DOWNSIDE RISK என்று கூறப்படும் மிகக்குறைந்த இறங்குமுகம் உள்ள ஒரு பங்காக PUNJLLOYD பார்க்கப்படுகிறது.

Friday, January 15, 2010

           இன்று NIFTYக்கு 5298-5355 RESISTANCE புள்ளிகளாகவும், 5200-5160 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. RELIANCE, NTPC INFOSYSTCH, ONGC போன்ற HEAVY WEIGHT பங்குகள் POSITIVEஆக இருப்பதினால் சந்தையில் திடீர் வீழ்ச்சிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பது என் கருத்தாக உள்ளது, எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செய்வதை குறைத்துக்கொண்டு சிறு சிறு சரிவுகளை முதலீடு வாய்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு. NIFTY 5300 என்ற புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 5400-5500 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 233 TGT 236-239

SELL NTPC BELOW 229 TGT 227-225


BUY  PUNJLLOYD ABOVE 225 TGT 231-237

SELL PUNJLLOYD BELOW 219 TGT 216-213

Thursday, January 14, 2010

           இன்று NIFTY 26 புள்ளிகள் உயர்ந்து 5259 என்ற புள்ளியிலும், SENSEX 75 புள்ளிகள் உயர்ந்து 17585 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. RIL இன்று சுமார் 3% ஏற்றம் கண்டது. வங்கிப்பங்குகள் சரிவை சந்தித்தன. இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.

                    என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 
            இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மற்றம் இல்லை. VOLATILE மிகுந்த சந்தையில் மிகுந்த கவனமாக வர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 380 TGT 383-388

SELL HCLTECH BELOW 373 TGT 370-367


BUY  TVSMOTOR ABOVE 80 TGT 82-84

SELL TVSMOTOR BELOW 76 TGT 74-72

Wednesday, January 13, 2010

           இன்று GAPDOWNல் துவங்கிய நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டன. TECHNOLOGY பங்குகள் இன்றும் நல்ல ஏற்றம் கண்டன.

          இன்று NIFTYக்கு 5264-5298 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 5200-5160 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. இன்று சந்தை மிகுந்த VOLATILEலுடன் காணப்படலாம் எனவே குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும் SUPPORT உடையும் பங்குகளை விற்று வாங்கவும் பழகிக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பங்குகளில் வர்த்தகம் செய்வதை விட TECHNICALலாக பலமாகவோ அல்லது பலவீனமாகவோ உள்ள பங்குகளை கண்டறிந்து அதை வாங்கி விற்கவோ அல்லது விற்று வாங்கவோ பழகுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 760 TGT 770-780

SELL TCS BELOW 741 TGT 731-721


BUY  PTC ABOVE 117 TGT 119-122

SELL PTC BELOW 115 TGT 113-111

Tuesday, January 12, 2010

            இன்று NIFTY 39 புள்ளிகள் சரிந்து 5210 என்ற புள்ளியிலும், SENSEX 104 புள்ளிகள் சரிந்து 17422 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. TECHNOLOGY பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

           NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று INFOSYSTCH, TCS, WIPRO போன்ற முக்கிய நிறுவனங்களின் Q3 RESULTS வெளியாக உள்ளது, எனவே கவனமாக வர்த்தகம் செய்யவும்.

           RELIANCE INDUSTRY இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எண்ணை சுத்திகரிப்பு செய்யும் நிறுவனம். இந்த நிறுவனம் சில வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தும் நோக்கோடு அதனிடம் உள்ள பங்குகளை கடந்த சில நாட்களாக விற்றது. இந்த பங்கில் மிகப்பெரிய ஏற்றம் தெரிகிறது குறுகியகால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம். STOPLOSS 1035 CLOSING BASIS TGT 1150-1175. இந்த JOCKPOT CALLஐ தவறவிடவேண்டாம். RELIANCE நீண்ட கால முதலீடுக்கேற்ற மிக சிறந்த பங்கு.  

இன்றைய பரிந்துரை

BUY  UNITECH ABOVE 91 TGT 93-96

SELL UNITECH BELOW 89 TGT 88-87

Monday, January 11, 2010

            இன்று GAPUP முறையில் துவங்கிய நமது சந்தை இறுதியில் இறக்கம் கண்டன. NIFTY 5 புள்ளிகள் உயர்ந்து 5249 என்ற புள்ளியிலும், SENSEX 13 புள்ளிகள் குறைந்து 17526 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளன.

          இன்று NIFTYக்கு 5298-5355 RESISTANCE புள்ளிகளாகவும், 5200-5160 புள்ளிகளாகவும் உள்ளன. NTPC, DLF, JPASSOCIAT, ONGC, IOC, APTECHT, IFCI போன்ற பங்குகளில் பெரிய BULLISH BREAKOUTகிற்கு இந்த வாரம் வாய்ப்பு உள்ளது, மற்ற பங்குகளில் கவனம் செலுத்துவதை விட இந்த பங்குகளை கவனித்து வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.  கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 235 TGT 239-242

SELL NTPC BELOW 229 TGT 227-225


BUY  JPASSOCIAT ABOVE 165 TGT 170-174

SELL JPASSOCIAT BELOW 160 TGT 158-155

Sunday, January 10, 2010

           கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SUZLON பங்கானது 91க்கு மேல் 94.30 வரை  3.5% லாபம் தந்துள்ளது. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு APTECHT. கணினி கல்வி மற்றும் SOFTWARE துறையை சேர்ந்த ஒரு SMALL CAP நிறுவனமாகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. APTECHT 210 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 225-235 உள்ளன, STOPLOSS 200 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். அதன் CHARTஐ கீழே காணலாம்.



          கடந்த வாரம் NIFTY சுமார் 44 புள்ளிகள் உயர்ந்து 5245 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரமும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 5180 என்ற புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கும் வரை காளையின் பிடியிலேயே இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். CLOSING BASIS முறையில் இந்த புள்ளி உடைபட்டால் வீழ்ச்சி இருக்கலாம். சில முக்கிய நிகழ்வுகளாக  உணவு INFLATION 18.22% VS 19.83% என குறைந்துள்ளது, NASDAQ 17 புள்ளிகள் உயர்ந்தும், DOW 11 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. வேறு எந்த கெட்ட செய்திகளும் வரும் வாரத்தில் இல்லை என்றால் நமது சந்தையில் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.

           இந்த வாரம் நான் என் நண்பர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்லப்போவதில்லை. மாறாக DALAL STREET இதழில் FIIS ஏன் தங்களது பணத்தை இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டுள்ளார்கள் ( கடந்த 2009ம் வருடம் 80000 கோடிகள் ) என்பதற்கு 7 காரணங்களை DALAL STREET இதழ் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. மேலும் நமது இந்திய நாட்டு சந்தையானது CHINA, BRASIL, RUSSIA போன்ற வளரும் நாடுகளிலிருந்து எவ்வாறு வாய்ப்புக்கள் நிறைந்த சந்தையாக உள்ளது போன்ற சுவாரசியமாக தகவல்கள் உள்ளன. நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக படித்து பயன் பெறுங்கள். தவறு செய்வது தவறல்ல, தவறை திருத்திக்கொள்ளாதது தான் தவறு. வாழ்த்துக்கள்.    

Friday, January 8, 2010

             இன்று NIFTY 18 புள்ளிகளும், SENSEX 75 புள்ளிகளும் குறைந்து முடிந்தது.

          NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை பக்கவாட்டில் நகர்வதால் TECHNICAL கூட வேலை செய்யாது. எனவே குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

          இன்று நான் எந்த பரிந்துரையும் கொடுக்கப்போவதில்லை மாறாக சில பங்குகளின் முக்கிய SUPPORT புள்ளிகளை கொடுக்கஉள்ளேன். இந்த பங்குகளை அதன் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் வரும் பொழுது வாங்கலாம். பலன் நிச்சயம் உண்டு.

HEROHONDA SUPPORT @ 1622

MARUTI         SUPPORT  @ 1425

SAIL               SUPPORT @ 230

ICICIBANK    SUPPORT @ 846

SBIN                SUPPORT @ 2252

          இந்த புள்ளிகள் CLOSING BASISல் உடைந்தால் இந்த பங்குகளுக்கு வீழ்ச்சி உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.  

Thursday, January 7, 2010

         இன்று NIFTY 19 புள்ளிகள் குறைந்து 5263 என்ற புள்ளியிலும், SENSEX 85 புள்ளிகள் குறைந்து 17616 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 5298-5355 RESISTANCE புள்ளிகளாகவும், 5250-5160 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1228 TGT 1250-1265

SELL ONGC BELOW 1217 TGT 1207-1200


BUY  DLF ABOVE 381 TGT 384-388

SELL DLF BELOW 374 TGT 371-368

Wednesday, January 6, 2010

     இன்று உடல் நிலை சரிஇல்லாத காரணத்தால் பதிய முடியவில்லை

Tuesday, January 5, 2010

             இன்று NIFTY 46 புள்ளிகள் உயர்ந்து 5278 என்ற புள்ளியிலும், SENSEX 127 புள்ளிகள் உயர்ந்து 17686 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.


           இன்று NIFTYக்கு 5255-5298 RESISTANCE புள்ளிகளாகவும், 5160-5067 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்தும், குறைந்த VOLUMEலும் TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SAIL ABOVE 250 TGT 254-258

SELL SAIL BELOW 244 TGT 240-237


BUY  RENUKA ABOVE 232 TGT 235-238

SELL RENUKA BELOW 226 TGT 224-222

Monday, January 4, 2010

         இன்று நமது சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. NIFTY 31 புள்ளிகள் உயர்ந்து 5232 என்ற புள்ளியிலும், SENSEX 94 புள்ளிகள் உயர்ந்து 17559 என்ற புள்ளியில் முடிந்துள்ளது



           இன்று NIFTYக்கு 5255-5298 RESISTANCE புள்ளிகளாகவும், 5160-5067 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. 4900 என்ற புள்ளி மிக முக்கிய  SUPPORT புள்ளியாக பார்க்கப்படுகிறது. இந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடையும் பட்சத்தில் மிகப்பெரிய வீழ்ச்சிகள் இருக்கலாம். குறைந்த VOLUMEஇல் மட்டுமே TRADING செய்யுங்கள். NHPC இந்த பங்கில் காளைகளின் ஆதிக்கம் நன்கு தெரிகிறது.35 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் 38.50-42 செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது, எனவே இந்த பங்கின் மீது ஒரு கண்ணை வையுங்கள். RECLTD இந்த பங்கிற்கு 30% இடைக்கால DIVIDEND அறிவிக்கப்பட்டுள்ளது RECORD தேதி 04/01/2010, இதிலும் பணம் செய்யும் வாய்ப்பு உள்ளது கவனித்து செயல்படவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 332 TGT 336-339

SELL BHARTIARTL BELOW 326 TGT 323-320


BUY  JPASSOCIAT ABOVE 149 TGT 151-153

SELL JPASSOCIAT BELOW 145 TGT 143-141

Sunday, January 3, 2010

        கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SUZLON பங்கானது அதன் உச்ச விலையான 91.70 என்ற புள்ளி வரை சென்றாலும், 91 என்ற புள்ளிக்கு மேல் முடியவில்லை. இந்த வாரமும் நான் SUZLON பங்கையே பரிந்துரை செய்கிறேன். 91 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் வாங்கலாம், இலக்காக 97-105 உள்ளது STOPLOSS 85 என்ற புள்ளியை CLOSING BASISல் வைத்துக்கொள்ளலாம்.

        கடந்த வாரம் NIFTY 23 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.கடந்த வாரத்தை பொறுத்தவரை நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. RELIANCE, SBIN, TATAMOTORS, BPCL, SAIL, NTPC, TATAPOWER, POWERGRID, RELINFRA, ICICIBANK, BHARTIARTL போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. இந்த வார நிகழ்வாக FOOD INFLATION சுமார் 20% என்ற அளவு 11 வருட உச்சத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. USAல் வெளியான JOBLESS DATA ஏமாற்றம் அளிப்பதாக இருந்ததால் NASDAQ மற்றும் DOW சந்தைகள் 1% இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் உயர்வுகளை உங்கள் லாபத்தை வெளியே எடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் தற்பொழுது வேண்டவே வேண்டாம். கையில் பணத்துடன் காத்திருங்கள், நல்ல வாய்ப்புக்கள் நிச்சயம் உண்டு, அப்பொழுது உங்கள் முதலீடை தொடங்குங்கள்.

        இன்று நான் என் நண்பர்களுக்கு சொல்வது இதுவரை நீங்கள் எப்படி வர்த்தகம் அல்லது முதலீடு செய்திருந்தாலும், இந்த புத்தாண்டிலிருந்து நீங்கள் சுயமாக TECHNICAL மற்றும் FUNDAMENTAL RESEARCH செய்து வர்த்தகம் அல்லது முதலீடு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது முதலில் கஷ்டமாக இருந்தாலும் பிறகு மிகவும் எளியதாக மாறிவிடும், லாபம் அதிகமாகவும் நஷ்டம் குறைவாகவும்  நிச்சயம் வரும். மொத்தத்தில் உங்கள் லாபம் மற்றும் நஷ்டம் உங்கள் கையில், இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல லாபத்தையும் கொடுக்கட்டும், அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.   

Friday, January 1, 2010

          என் நண்பர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்