Sunday, January 31, 2010

          கடந்த வாரம் நான் எந்தப் பங்கையும் பரிந்துரைக்கவில்லை. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு INDIANB. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசுத்துறை வங்கியாகும். இதன் பங்கில் SYMMETRICAL TRIANGLE BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது INDIANB 180 என்றப்புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 190-200ம் உள்ளது. STOPLOSS 170 என்றப்புள்ளியை CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். கடந்த வாரத்தில் சந்தை பெருமளவு இறங்கியப்பொழுதும் INDIANB பங்கானது ஏற்றம் கண்டுள்ளது. எனவே வரும் வாரத்தில் இந்தப்பங்கு நிச்சயம் அதன் இலக்குகளை அடையும் என்பது என் கருத்து. இதன் CHARTஐ கீழே காணலாம்.

  

          கடந்த வாரத்தில் NIFTY 154 புள்ளிகள் சரிந்து 4882.05 என்ற புள்ளியிலும், SENSEX 502 புள்ளிகள் குறைந்து 16358 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று RBI CRR விகிதத்தை 0.75 BPS உயர்த்தியது. அமெரிக்க GDP வளர்ச்சிவிகிதமானது எதிர்ப்பார்பிற்கு மிஞ்சி 5.7% என்று வெளிவந்தாலும் NASDAQ மற்றும் DOW சந்தையானது சரிவடைந்தது. நம் நாட்டு பெரும்பான்மையான நிறுவனங்கள் நல்ல Q3 RESULTS தந்துள்ளது, BUDGET எதிர்ப்பார்ப்பும் அதிகமாகியுள்ளது, எனவே வரும் வாரத்தில் வேறு எந்த கெட்ட செய்தியும் இல்லை என்றால் இறக்கங்களை முதலீடுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் பலன் நிச்சயம் உண்டு.

No comments: