Sunday, January 3, 2010

        கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SUZLON பங்கானது அதன் உச்ச விலையான 91.70 என்ற புள்ளி வரை சென்றாலும், 91 என்ற புள்ளிக்கு மேல் முடியவில்லை. இந்த வாரமும் நான் SUZLON பங்கையே பரிந்துரை செய்கிறேன். 91 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் வாங்கலாம், இலக்காக 97-105 உள்ளது STOPLOSS 85 என்ற புள்ளியை CLOSING BASISல் வைத்துக்கொள்ளலாம்.

        கடந்த வாரம் NIFTY 23 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.கடந்த வாரத்தை பொறுத்தவரை நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. RELIANCE, SBIN, TATAMOTORS, BPCL, SAIL, NTPC, TATAPOWER, POWERGRID, RELINFRA, ICICIBANK, BHARTIARTL போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. இந்த வார நிகழ்வாக FOOD INFLATION சுமார் 20% என்ற அளவு 11 வருட உச்சத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. USAல் வெளியான JOBLESS DATA ஏமாற்றம் அளிப்பதாக இருந்ததால் NASDAQ மற்றும் DOW சந்தைகள் 1% இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் உயர்வுகளை உங்கள் லாபத்தை வெளியே எடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் தற்பொழுது வேண்டவே வேண்டாம். கையில் பணத்துடன் காத்திருங்கள், நல்ல வாய்ப்புக்கள் நிச்சயம் உண்டு, அப்பொழுது உங்கள் முதலீடை தொடங்குங்கள்.

        இன்று நான் என் நண்பர்களுக்கு சொல்வது இதுவரை நீங்கள் எப்படி வர்த்தகம் அல்லது முதலீடு செய்திருந்தாலும், இந்த புத்தாண்டிலிருந்து நீங்கள் சுயமாக TECHNICAL மற்றும் FUNDAMENTAL RESEARCH செய்து வர்த்தகம் அல்லது முதலீடு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது முதலில் கஷ்டமாக இருந்தாலும் பிறகு மிகவும் எளியதாக மாறிவிடும், லாபம் அதிகமாகவும் நஷ்டம் குறைவாகவும்  நிச்சயம் வரும். மொத்தத்தில் உங்கள் லாபம் மற்றும் நஷ்டம் உங்கள் கையில், இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல லாபத்தையும் கொடுக்கட்டும், அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.   

No comments: