Friday, August 31, 2012

காளையின் பார்வையில் POWERGRID.....

          POWERGRID பங்கானது 37 மாத உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது, மேலும் 115-123 இந்த இரு குறுகிய புள்ளிகளில் கடந்த சில வாரங்களாக வர்த்தகமாகிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன புள்ளிகளில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்பட்டாலும் அந்ததிசையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இந்தப்பங்கு தினவர்த்தகர்களுக்கு மிகவும் ஏற்ற பங்கு.

Thursday, August 30, 2012

BANKNIFTYக்கு DOUBLE TOP BEARISH BREAKOUT....

BANKNIFTYக்கு TECHNICALலாக DOUBLE TOP  உருவமைப்பு உருவாகியுள்ளது. அதன்படி10000 புள்ளிக்கு கீழ் BANKNIFTY வலிமையாக ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் 9619 வரை சரிய வாய்ப்புள்ளது. எனவே தினவர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள். விற்று வாங்கி வர்த்தகம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.

Tuesday, August 28, 2012

உச்சங்களில் வரும் SELLING PRESSURE...

           NIFTY 5400-5450 புள்ளிகளை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் சரிந்துள்ளது. மேற்சொன்ன புள்ளிகளுக்கு கீழ் சந்தை வர்த்தகமானால் பலவீனமே. எனவே தினவர்த்தகம் மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் சந்தையின் திசை தெரிந்த பிறகு வர்த்தகத்தை தொடர்வது நல்லது.

          வங்கித்துறை, REALITY துறை போன்றவைகள் பலவீனமாக இருப்பதை கவனித்து தினவர்த்தகர்கள் விற்றுவாங்கி வர்த்தகம் செய்வது பலனளிக்கும். NIFTYக்கு அடுத்த SUPPORT புள்ளிகளாக 5300-5200 புள்ளிகள் உள்ளன. கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Monday, August 27, 2012

CANARABANK பங்கிற்கு இது கஷ்டகாலம்...

          CANARABANK (CANBK) பங்கானது இன்று 34 மாத LOW விலையில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. இதன் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக 300 உள்ளது. 300ஐ STOPLOSSஆக வைத்து நீண்ட கால மற்றும் நடுத்தர கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்கை வாங்கலாம். சிறந்த லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இதன் 34 மாத CHARTஐ கீழே காணலாம்.

Friday, August 24, 2012

பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு பயனுள்ள இணையதளம்

          பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு பயனுள்ள இணையதளத்தை கீழே கொடுத்துள்ளேன். இந்த இணையதளத்தில் TECHNICALS, BULLISH & BEARISH BREAKOUTS என்று அனைத்து தகவல்களும் எளிய ஆங்கிலத்தில் உள்ளது. பயன்படுத்திக்கொள்ளவும்.

http://www.vfmdirect.co.in/nl/index.shtml

Thursday, August 23, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          நமது சந்தை கடந்த சில நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, எனவே தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்கள் உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் OUT PERFORM செய்யும் பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்தால் லாபம் நிச்சயம்.

Wednesday, August 22, 2012

BREAKOUT நிலையில் NIFTY....

          NIFTY அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 5400ஐ மேல்நோக்கி உடைத்து முடிவடைந்துள்ளது. NIFTY 5400க்கு மேல் தொடர்ந்து வர்த்தகமானால் ஏற்றம் அடையவே வாய்ப்புள்ளது TECHNOLOGY, FMCG, PHARMA மற்றும் OIL & GAS துறை பங்குகள் OUTPERFORM செய்துள்ளன. இந்தத் துறைகள் மேலும் உயரவே வாய்ப்புள்ளது. மேற்சொன்ன துறைகளில் OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்.

Tuesday, August 21, 2012

குறைந்த சந்தையிலும் உயர்ந்த பங்குகள்....

          இந்தவாரம் NIFTYக்கு 5400-5300 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். மேலும் சந்தை பெருமளவு உயராதபொழுதும் சில பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. அவற்றை CHARTடுடன் கீழே கொடுத்துள்ளேன். இந்தப்பங்குகள் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TCS

          TCS பங்கானது 1280-1300 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாக உள்ளன இந்தப்புள்ளிகளை மேல்நோக்கி உடைத்தால் 1400 வரை செல்ல வாய்ப்புள்ளது.





HDFCBANK
          இந்தப்பங்கானது 600க்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 650-700 வரை செல்ல வாய்ப்புள்ளது. கரடிகளால் இந்தப்பங்கை நெருங்கமுடியவில்லை.



ITC
          ITC பங்கிற்கு 250 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்பபுள்ளிக்கு மேல் வர்த்தகமானால் தொடர்ந்து ஏற்றம் சாத்தியமே.



POWER GRID
          இந்தப்பங்கானது 115-120 இந்த இருபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது CLOSING BASISல் எந்தப்புள்ளி உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கும்.
ACC

          ACC பங்கிற்கு 1300 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் 1400 வரை எளிதாக செல்ல வாய்ப்புள்ளது.
 


RELIANCE
          கடந்த வாரத்தில் NIFTY மற்றும் SENSEX உயர்ந்ததற்கு RELIANCE பங்கு உயர்ந்ததே காரணம். இந்தப்பங்கிற்கு 800 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் RELIANCE 800 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 850-900 வரை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.




SUNPHARMA
          SUNPHARMA பங்கிற்கு 650 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் SUNPHARMA 650 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 700 வரை செல்ல வாய்ப்புள்ளது.
HINDUNILVR
          HINDUNILVR பங்கிற்கு 490 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் HINDUNILVR 490 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 525-550 வரை செல்ல வாய்ப்புள்ளது.




           மேலும் நீங்கள் செய்யும் வர்த்தகத்தை நீங்களே கண்டுபிடித்தும், நீங்களே முடிவெடுத்ததும் பழகும்பொழுது அதிக லாபமும் குறைந்த நஷ்டமும் அடைவதற்கே அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் TECHNICALS அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள். எந்த குறுஞ்செய்தியையும் (SMS) நம்பவேண்டாம்.



Monday, August 20, 2012

SPINNING TOP சொல்லும் செய்தி....

          NIFTYக்கு வெள்ளிக்கிழமை SPINNING TOP உருவமைப்பு உருவாகியுள்ளது. முதலில் SPINNING TOP என்றால் என்ன? என்பதை பார்ப்போம். SPINNING TOP என்பது இன்னும் திசையை முடிவுசெய்யவில்லை என்று அர்த்தம்  எடுத்துக்கொள்ளலாம், அதாவது சந்தை கீழேயோ அல்லது மேலேயோ செல்லலாம். அதன்படி NIFTY 5400-5300 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது 5400ஐ வலுவாக உடைத்தால் 5500ம் 5300ஐ கீழ்நோக்கி உடைத்தால் 5200ம் வருவதற்கு வாய்ப்புள்ளது. SPINNING TOP உருவமைப்பை கீழே காணலாம்.

           NIFTYக்கு வெள்ளிக்கிழமை SPINNINGTOP உருவமைப்பு உருவாகியுள்ளதை கீழ் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன். TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
 

Friday, August 17, 2012

5400ஐ NIFTY கடந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்றம் சாத்தியம்.....

          5400ஐ கடந்தால் மட்டுமே தொடர்ந்து NIFTYக்கு ஏற்றம் சாத்தியம், ஆனால் 5400 புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இந்தப்புள்ளி CLOSING BASISல் உடைப்பட்டால் NIFTY 5500 வரை செல்ல வாய்ப்புள்ளது.  கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டும் வர்த்தகம் செய்யுங்கள். NIFTY RESISTANCE புள்ளியை கீழே உள்ள CHARTல் காணலாம்.

Wednesday, August 15, 2012

குறைந்த பணவீக்கம் உயர்ந்த சந்தை....

           நாட்டின் பணவீக்கம் 7.25%லிருந்து 6.87% குறைந்ததால் நேற்று நமது பங்குசந்தையில் காளைகளின் ஆதிக்கம் இருந்தது. சந்தை குறுகிய காலத்திற்கு உயர வாய்ப்புள்ளது. இதை குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் தினவர்த்தகர்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.

          RELIANCE, HINDUNILVR, ITC, TATASTEEL, ICICIBANK, DIVISLAB, HDFCBANK, HCLTECH, TCS, ACC, AMBUJACEM, CIPLA போன்ற வலுவாக உள்ள பங்குகளில் குறுகிய கால முதலீடு அல்லது தினவர்த்தகம் செய்யலாம், பலன் நிச்சயம் உண்டு.

சுதந்திரதின வாழ்த்துக்கள்.....

          இந்தியர்கள் அனைவருக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.


Tuesday, August 14, 2012

உச்சங்களில் வரும் SELLING PRESSURE.....

          NIFTY,  SENSEX மற்றும் பங்குகளுக்கும் அதன் முக்கிய RESISTANCE புள்ளிகளுக்கு அருகில் மிக அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இதனால் உச்சங்களில் சந்தை தடுமாற்றத்தை சந்திக்கிறது. இதற்கு சந்தை இன்னும் காளையின் கையில் வரவில்லை என்றே தெரிகிறது. ஒரு திசை தெரியும் வரை தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

JSWSTEEL மற்றும் DLF பங்குகளில் BREAKOUT...

          JSWSTEEL METAL துறையை சேர்ந்த தனியார் நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப்பங்கானது 750க்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் வாங்கலாம் இலக்காக 775-800 இலக்குகளாக உள்ளன. STOPLOSS 735-725 என்றப்புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். இதன் CHARTஐ கீழே காணலாம்.

          DLF-  REALITY  துறையை  சேர்ந்த நிறுவனம். இதன் CHARTல் 220க்கு மேல் வலுவாக வர்த்தகமானால் 230-240 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் SUPPORT புள்ளிகளாக 214-210 இவ்விரண்டு புள்ளிகளும் உள்ளன.

Sunday, August 12, 2012

ALL TIME உச்சத்தில் TCS! மேலும் உயரவே வாய்ப்புள்ளது....

          TCS நாட்டின் மிகப்பெரிய SOFTWARE ஏற்றுமதி நிறுவனம். தற்பொழுது ALL TIME உச்சத்தில்வர்த்தகமாகிக்கொண்டுள்ள போதும் இந்தப்பங்கானது இன்னும் உயரவே வாய்ப்புள்ளது.

TCS TECHNICAL

          கடந்த 10 மாதங்களாக TCS பங்கானது 1100-1300 இந்த குறுகிய புள்ளிகளுக்குள் சுற்றிக்கொண்டுள்ளது, தற்பொழுது 1300 புள்ளி மேல்நோக்கி உடைப்பட்டால் 1500 வரை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. மேலும் கரடிகளால் மிக எளிதில் நெருங்க முடியாதவகையில் மிகமிக பலமாக உள்ளது. இந்தப்பங்கு குறுகியகாலம், நடுத்தரகாலம் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்ற பங்காக உள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Friday, August 10, 2012

SBIN காலாண்டு முடிவுகள்.....

           SBINன் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளன, கடந்த காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் (3752) 136% வளர்ச்சி அடைந்துள்ளது, எனினும் வங்கியின் வராக்கடன் 22760 கோடியிலிருந்து 42720ஆக உயர்ந்துள்ளது சந்தைக்கு பலவீனமாக கருதப்படுகிறது கவனித்து செயல்படவும்.

IIP DATA அதிர்ச்சி....

          JUNE மாதத்திற்கான தொழில் வளர்ச்சி விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் 1.8% மட்டுமே உள்ளது சந்தைக்கு மிகவும் பலவீனமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாது எந்த இந்திய நிறுவனங்களும் இதுபோல் இழப்பை சந்திக்காத இழப்பை (22451 கோடி) IOC இந்த காலாண்டில் அடைந்துள்ளதும் நமதபங்குசந்தையில் நிச்சயம் எதிரொலிக்கும் உஷார்.

          TECHNICALSபடியும்  NIFTYக்கு 5350ம், SENSEXகிற்கு 17750ம் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மேற்சொன்ன புள்ளிகளுக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் ஏற்றம் சாத்தியப்படும். கவனித்து செயல்படவும் அவசரம் மற்றும் பதட்டம் வேண்டாம்.

Thursday, August 9, 2012

வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய நட்சத்திர பங்கு.....

          TATASTEEL நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம். இதன் பங்கில் DOUBLE BOTTEM BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, TISCO பங்கானது 420க்கு மேல் வலுவாக மேல்நோக்கி சென்றால் 450 வரை தங்குதடையின்றி உயர நல்ல வாய்ப்புள்ளது. இந்தப்பங்கினை உங்கள் WATCH LIST ல் வைத்துக்கொள்ளவும்.

நீண்ட கால முதலீடிற்கு ஏற்ற தரமான பங்கு.....

          CANARA BANK நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி. தற்பொழுது TECHNICALலாக மிகவும் பலவீனமாக உள்ளது. அதற்கு அதன் காலாண்டு முடிவுகள்சரியில்லாததே ஆகும், ஆனால் அடிப்படையில் (FUNDAMENTALLY) மிகவும் பலமான மற்றும் தரமான வங்கி. இதன் சப்போர்ட் புள்ளிகளாக 300-250 புள்ளிகள் உள்ளன. சிறிது பொறுமையுடன் காத்திருந்து அதன் சப்போர்ட் புள்ளிகளுக்கு அருகில் வரும்பொழுது சிறிது சிறிதாக நீண்டகால முதலீடிற்கு வாங்கி சேர்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் உண்டு. CANBKன் இரண்டு வருட CHARTஐ கீழே காணலாம்.

Wednesday, August 8, 2012

PFCயில் BULLISH BREAKOUT...

          பொதுத்துறை நிறுவனமான PFCயில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப்பங்கானது 190 என்ற  புள்ளியை வலுவாக மேல்நோக்கி கடந்தால் 200-210 வரை செல்ல வாய்ப்புள்ளது கவனிக்கவும். உங்களின் STOPLOSS 180க்கு கீழ் வைத்துக்கொள்ளுங்கள். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


Tuesday, August 7, 2012

தினவர்த்தகத்தில் லாபம் செய்வது எப்படி?

          தினவர்த்தகத்தில் லாபம் செய்வது எப்படி என்பதை அறிஞர் ஒருவர் ஆங்கிலத்தில் சில எளிய வழிமுறைகளில் கொடுத்துள்ளார். அதை நான் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன், மொழிபெயர்ப்பு செய்ய நேரம் இல்லாமையால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1.
      The first and most important rule is - in bull markets, one is supposed to be long. This may sound obvious, but how many of us have sold the first rally in every bull market, saying that the market has moved too far, too fast. I have before, and I suspect I'll do it again at some point in the future. Thus, we've not enjoyed the profits that should have accrued to us for our initial bullish outlook, but have actually lost money while being short. In a bull market, one can only be long or on the sidelines. Remember, not having a position is a position.
   2.
      Buy that which is showing strength - sell that which is showing weakness. The public continues to buy when prices have fallen. The professional buys because prices have rallied. This difference may not sound logical, but buying strength works. The rule of survival is not to "buy low, sell high", but to "buy higher and sell higher". Furthermore, when comparing various stocks within a group, buy only the strongest and sell the weakest.
   3.
      When putting on a trade, enter it as if it has the potential to be the biggest trade of the year. Don't enter a trade until it has been well thought out, a campaign has been devised for adding to the trade, and contingency plans set for exiting the trade.
   4.
      On minor corrections against the major trend, add to trades. In bull markets, add to the trade on minor corrections back into support levels. In bear markets, add on corrections into resistance. Use the 33-50% corrections level of the previous movement or the proper moving average as a first point in which to add.
   5.
      Be patient. If a trade is missed, wait for a correction to occur before putting the trade on.
   6.
      Be patient. Once a trade is put on, allow it time to develop and give it time to create the profits you expected.
   7.
      Be patient. The old adage that "you never go broke taking a profit" is maybe the most worthless piece of advice ever given. Taking small profits is the surest way to ultimate loss I can think of, for small profits are never allowed to develop into enormous profits. The real money in trading is made from the one, two or three large trades that develop each year. You must develop the ability to patiently stay with winning trades to allow them to develop into that sort of trade.
   8.
      Be patient. Once a trade is put on, give it time to work; give it time to insulate itself from random noise; give it time for others to see the merit of what you saw earlier than they.
   9.
      Be impatient. As always, small loses and quick losses are the best losses. It is not the loss of money that is important. Rather, it is the mental capital that is used up when you sit with a losing trade that is important.
  10.
      Never, ever under any condition, add to a losing trade, or "average" into a position. If you are buying, then each new buy price must be higher than the previous buy price. If you are selling, then each new selling price must be lower. This rule is to be adhered to without question.
  11.
      Do more of what is working for you, and less of what's not. Each day, look at the various positions you are holding, and try to add to the trade that has the most profit while subtracting from that trade that is either unprofitable or is showing the smallest profit. This is the basis of the old adage, "let your profits run."
  12.
      Don't trade until the technicals and the fundamentals both agree. This rule makes pure technicians cringe. I don't care! I will not trade until I am sure that the simple technical rules I follow, and my fundamental analysis, are running in tandem. Then I can act with authority, and with certainty, and patiently sit tight.
  13.
      When sharp losses in equity are experienced, take time off. Close all trades and stop trading for several days. The mind can play games with itself following sharp, quick losses. The urge "to get the money back" is extreme, and should not be given in to.
  14.
      When trading well, trade somewhat larger. We all experience those incredible periods of time when all of our trades are profitable. When that happens, trade aggressively and trade larger. We must make our proverbial "hay" when the sun does shine.
  15.
      When adding to a trade, add only 1/4 to 1/2 as much as currently held. That is, if you are holding 400 shares of a stock, at the next point at which to add, add no more than 100 or 200 shares. That moves the average price of your holdings less than half of the distance moved, thus allowing you to sit through 50% corrections without touching your average price.
  16.
      Think like a guerrilla warrior. We wish to fight on the side of the market that is winning, not wasting our time and capital on futile efforts to gain fame by buying the lows or selling the highs of some market movement. Our duty is to earn profits by fighting alongside the winning forces. If neither side is winning, then we don't need to fight at all.
  17.
      Markets form their tops in violence; markets form their lows in quiet conditions.
  18.
      The final 10% of the time of a bull run will usually encompass 50% or more of the price movement. Thus, the first 50% of the price movement will take 90% of the time and will require the most backing and filling and will be far more difficult to trade than the last 50%.

There is no "genius" in these rules. They are common sense and nothing else, but as Voltaire said, "Common sense is uncommon." Trading is a common-sense business. When we trade contrary to common sense, we will lose. Perhaps not always, but enormously and eventually. Trade simply. Avoid complex methodologies concerning obscure technical systems and trade according to the major trends only.
                                 
                                                                                                                                  VILVA SHARES

சந்தையில் திடீர் எழுச்சி நீடிக்குமா?

           அமெரிக்கப்பங்குச்சந்தையில் நிகழ்ந்த எழுச்சியே திங்களன்று நமது  பங்குசந்தையிலும் எதிரொலித்தது, ஆனால் தொலைக்காட்சிகள், அனைத்தும் ப.சிதம்பரம் பதவிஏற்றதினால் சந்தை உயந்ததை போல் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றன, இந்தநேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் விழிப்புடனும் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செய்யவேண்டும்.

            நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது, இந்தவார இறுதியில் தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்பு இவை இரண்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. நான் மேற்சொன்ன தகவலால் சந்தை இறக்கம் அடையும் அல்லது ஏற்றம் அடையும் என்பதை சொல்லவில்லை. சந்தை குறித்த தகவல்களை தெரிந்து மட்டும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள், வதந்திகளை என்றும் நம்பாதீர்கள்.....

Monday, August 6, 2012

நட்சத்திர பங்கு (LICHSGFIN)

           LICHSGFIN கடந்த சில மாதங்களாக 240-300 இந்த இருப்புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இவற்றில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் வேகமாக இருக்கலாம். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Sunday, August 5, 2012

NIFTY மற்றும் SENSEX 5350-17750 புள்ளிகளுக்கு கீழ் மிகவும் பலவீனம்....

          NIFTY 5350க்கு கீழும் SENSEX 17750 புள்ளிக்கு கீழும் தொடர்ந்து வர்த்தகமாவது TECHNICALலாக சந்தைக்கு மிகவும் பலவீனமாக கருதப்படுகிறது. எனவே தினவர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் தங்களின் வர்த்தகத்தை செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தருணங்களில் TECHNICALலாக பலமான பங்குகளில் மட்டும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும். SENSEXன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Thursday, August 2, 2012

ICICIBANK பங்கில் DOUBLE BOTTOM BREAKOUT....

          ICICIBANK பங்கில் DOUBLE BOTTOM BREAKOUT நிலையில் உள்ளது. அதாவது ICICIBANK பங்கிற்கு 1000 என்றப்புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்த தடுப்பானது வலுவாக உடையும்பட்சத்தில் 1100-1150 வரை செல்ல வாய்ப்புள்ளது.அப்படி 1000 என்றப்புள்ளியை கடக்க முடியவில்லை என்றால் மீண்டும் அதன் முக்கிய சப்போர்ட் புள்ளியான 900 வரை சரியவும் வாய்ப்புள்ளது. மேற்சொன்ன இரண்டு வாய்ப்புக்களையும் சரிவர கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம். CHARTஐ கீழே காணலாம்.


NIFTYயின் முக்கிய RESISTANCE 5300-5350....

          NIFTYக்கு 5300-5350 புள்ளிகள் மிகப்பெரிய RESISTANCE புள்ளிகளாக உள்ளன, இந்தப் புள்ளிகளை வலுவாக மேல்நோக்கி கடந்து முடிந்தால் மட்டுமே 5500-5600 என்ற அடுத்த இலக்கை அடைய முடியும். எனவே முக்கிய TECHNICAL கூறுகளை கூர்ந்து கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு முடிவுகளை சொந்தமாக நீங்களே எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.

          BANKNIFTYயானது கடந்த சில (6) மாதங்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. தற்பொழுது 10000 என்பது நல்ல SUPPORT புள்ளியாகவும் 10500-10800 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. மேலும் சிறப்பான காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ள வங்கிகளான SBIN, ICICIBANK, YESBANK போன்ற பங்குகளை அதனதன் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் வரும் வரை காத்திருந்து வாங்கி சில தினங்களில் விற்று லாபமீட்ட வாய்ப்புள்ளது. சிறிது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் நிச்சயம். BANKNIFTYயின் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Wednesday, August 1, 2012

SBIN பங்கை கவனியுங்கள்....

          TRADING மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் SBIN பங்கின் மீது ஒரு கண்ணை வைக்கலாம். STOPLOSS 2000, இலக்காக 2200 உள்ளது. இதன் CHARTஐ கீழே காணலாம்.