Sunday, January 24, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான PUNJLLOYD அதன் BUY ABOVEவான 225 என்ற புள்ளியை தொடவில்லை, கடந்த வாரம் PUNJLLOYDஇன் உச்ச விலை 221.35 ஆகும். இந்த வாரம் நான் எந்த பங்கையும் பரிந்துரை செய்யப்போவதில்லை.

          கடந்த வாரத்தில் NIFTY 216 புள்ளிகள் இழந்து 5036 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நமது சந்தை சரிந்ததன் முக்கிய காரணம் அமெரிக்க பங்குச்சந்தை ஆகும். அந்நாட்டின் அதிபர் OBAMA அறிவித்த சில புதிய வங்கிக் கொள்கைகள் சந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தன. வெள்ளிக்கிழமையன்றும் NASDAQ சந்தையானது மிகப்பெரிய சரிவையே கண்டுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது நம்நாட்டில் எந்த கெட்ட செய்தியும் இல்லை, இந்த சமயத்தில் நமது சந்தையும் உலக சந்தைக்கு ஏற்ப சரிகிறது. இந்த தருணத்தை சிறந்த முதலீடு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். திங்கட்கிழமை எப்படியும் சரிவுடனே நமது சந்தை துவங்கும். நாம் சிறிது சிறிதாக பங்குகளை வாங்க தொடங்கலாம். நாம் வாங்க நினைக்கும் பங்குகளின் அளவை  4 பகுதிகளாக பிரித்து தற்பொழுது ஒரு பகுதியை வாங்கலாம். பிறகு ஒவ்வொரு சரிவிலும் முதலீடை தொடரலாம். இவ்வாறு செய்யும்பொழுது மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்படுவதோடு மட்டும்மல்லாமல் 2 அல்லது 3 மதங்களில் மிகப்பெரிய லாபம் அடைய வாய்ப்பு நிச்சயம் உள்ளது.

          RSI என்பது ஒரு பங்கு OVERBOUGHTல் உள்ளதா அல்லது OVERSOLDல் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு அளவுகோல் ஆகும். சிலர் இதை 30லிருந்து  70 வரையும் சிலர் 40லிருந்து 80 வரையும் கணக்கிடுகின்றனர். அதாவது 30 அல்லது 40க்கு கீழ் ஒரு பங்கின் RSI இருந்தால் OVERSOLDலும், 70லிருந்து 80க்கு மேல் ஒரு பங்கின் RSI இருந்தால் OVERBOUGHTலும் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் TECHNICALS அறிந்திருந்தால் இவைகளை நீங்களே கண்டுபிடித்து முதலீடு செய்யலாம்.



          உங்கள் கவனத்திற்காக  சில தரம் வாய்ந்த A GROUP பங்குகளின் தற்பொழுதைய RELATIVE STRENGTH INDEX (RSI)ஐ கீழே கொடுத்துள்ளேன்.

LT 19, SBIN 31, ONGC 33, TATAPOWER 34, PUNJLLOYD 30, RANBAXY 31, SUZLON 36, UNITECH 36, DLF 38, IDBI 36, IOB 38, IVRCLINFRA 33, GMRINFRA 32, HCC 38, IBREALEST 33, JPASSOCIAT 40, JINDALSTEL 40, HDFC 27, RELINFRA 36, IDFC 38, BPCL 33, UNIPHOS 40.

           கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்பவர்கள் என்றும் நஷ்டத்தை மட்டுமே  அடைகிறார்கள். பொறுமையாகவும், TECHNICALS அறிந்தும் வர்த்தகம் அல்லது முதலீடு செய்பவர்கள் என்றும் லாபத்தையே அடைகிறார்கள். பணத்தின் மதிப்பை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள். நீங்கள் TECHNICALS அறிந்து கொண்டால் மட்டுமே அதிக லாபம், மிகக்குறைந்த நஷ்டம் அடைய முடியும். எங்கோ இருந்து வரும் SMS, மின்னஞ்சல் செய்தியால் உங்களுக்கு என்றும் லாபம் வராது என்பது என் திடமான கருத்து. அது உண்மையும் கூட. நிறைய வர்த்தக செய்திகளை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள், அதன் அடிப்படையில் மட்டுமே உங்கள் முடிவை நீங்களே எடுங்கள், நிச்சயம் உங்களுக்கு லாபம் வரும் வாழ்த்துக்கள்.

No comments: