Sunday, January 10, 2010

           கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SUZLON பங்கானது 91க்கு மேல் 94.30 வரை  3.5% லாபம் தந்துள்ளது. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு APTECHT. கணினி கல்வி மற்றும் SOFTWARE துறையை சேர்ந்த ஒரு SMALL CAP நிறுவனமாகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. APTECHT 210 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 225-235 உள்ளன, STOPLOSS 200 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். அதன் CHARTஐ கீழே காணலாம்.



          கடந்த வாரம் NIFTY சுமார் 44 புள்ளிகள் உயர்ந்து 5245 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரமும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 5180 என்ற புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கும் வரை காளையின் பிடியிலேயே இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். CLOSING BASIS முறையில் இந்த புள்ளி உடைபட்டால் வீழ்ச்சி இருக்கலாம். சில முக்கிய நிகழ்வுகளாக  உணவு INFLATION 18.22% VS 19.83% என குறைந்துள்ளது, NASDAQ 17 புள்ளிகள் உயர்ந்தும், DOW 11 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. வேறு எந்த கெட்ட செய்திகளும் வரும் வாரத்தில் இல்லை என்றால் நமது சந்தையில் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.

           இந்த வாரம் நான் என் நண்பர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்லப்போவதில்லை. மாறாக DALAL STREET இதழில் FIIS ஏன் தங்களது பணத்தை இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டுள்ளார்கள் ( கடந்த 2009ம் வருடம் 80000 கோடிகள் ) என்பதற்கு 7 காரணங்களை DALAL STREET இதழ் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. மேலும் நமது இந்திய நாட்டு சந்தையானது CHINA, BRASIL, RUSSIA போன்ற வளரும் நாடுகளிலிருந்து எவ்வாறு வாய்ப்புக்கள் நிறைந்த சந்தையாக உள்ளது போன்ற சுவாரசியமாக தகவல்கள் உள்ளன. நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக படித்து பயன் பெறுங்கள். தவறு செய்வது தவறல்ல, தவறை திருத்திக்கொள்ளாதது தான் தவறு. வாழ்த்துக்கள்.    

No comments: