Sunday, April 18, 2010

வரும் வார சந்தை நிகழ்வுகள்

          கடந்த  9 வாரங்களாக ஏற்றத்தை கண்டு வந்த நமது சந்தை கடந்த வாரம் சிறு சரிவை சந்தித்தன. NIFTY சுமார் 100 புள்ளிகள் குறைந்து 5262 என்றப் புள்ளியிலும், SENSEX 342 புள்ளிகள் குறைந்து 17591 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTY FUT 5180 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். 5180 என்றப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டால் 4950 வரை சந்தை சரிய வாய்ப்புள்ளது. NIFTYக்கு 4500 என்பது மிகப் பெரிய மற்றும் நீண்டகால தடுப்பாக உள்ளது. இந்தப் புள்ளி உடைபடவில்லை என்றால் இன்னும் 1 வருடத்தில் NIFTY மற்றும் SENSEX புது உச்சங்களை நிச்சயம் தொடும். 4000 போன்ற புள்ளிகள் இனி வரும் என்று நான் எதிர்பார்கவில்லை, காரணம் FIIS நமது சந்தையில் தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். CHINA, BRASIL போன்ற வளரும் நாடுகளை விட இளைஞர்கள் அதிகம் உள்ள  நம் நாட்டு சந்தையை பெரிதும் நம்புகின்றனர் மற்றும் விரும்புகின்றனர்.  எனவே இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் நீண்ட காலத்தில் நமது சந்தை மிகவும் நன்றாக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. NIFTY இன் மிக முக்கிய SUPPORT புள்ளிகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள CHARTஐ பாருங்கள்.



          வரும் வார நிகழ்வுகளாக RBI MONITORY பாலிசி வரும் செவ்வாய்கிழமை வெளியாக உள்ளது, பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் (9.9%) CRR மற்றும் REVERSE REBO விகிதங்கள் கூட்டப்படலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு கூட்டப்பட்டால் BANKS, AUTO, REALITY போன்ற SECTORS இறங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. வெள்ளியன்று NASDAQ மற்றும் DOW நன்கு சரிந்து முடிந்துள்ளது. அதற்கு காரணமாக அங்கு உள்ள GOLDMANSACHS நிறுவனத்தில் நடந்துள்ள சில முறைகேடுகள் சொல்லப்படுகிறது. எனவே கவனித்து முதலீடு செய்யவும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தினவர்தகதை தவிர்க்கவும்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த JPASSOCIAT பங்கு அதன் BUY ABOVE செல்லவேயில்லை, இந்த வாரம் இந்தப் பங்கு அவ்வாறு சென்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RELIANCE. இதன் Q4 RESULTS வரும் வாரங்களில் வெளிவர உள்ளது, மிகச்சிறந்த லாபம் எதிர்பார்க்கப்படுகிறது எனவே வரும் வாரங்களில் இந்தப் பங்கு கவனிக்கப்படவேண்டிய பங்காக உள்ளது. 1050 என்றப் புள்ளியை CLOSING BASIS STOPLOSS ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 1150-1200 உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம் பலன் நிச்சயம் உண்டு.  

No comments: