Sunday, April 4, 2010

வரும் வார சந்தை செய்திகள்

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த PFC பங்கானது அதன் BUY ABOVEவான 265 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடக்கவில்லை. வரும் வாரத்தில் அவ்வாறு கடந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு JPASSOCIAT சிமெண்ட் மற்றும் INFRASTRUCTURE துறையை சேர்ந்த தரமான தனியார் நிறுவனமாகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது அதாவது இந்தப் பங்கு 155 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 160-165 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 148 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.
 
          கடந்த வாரம் NIFTY 9 புள்ளிகள் உயர்ந்தும், SENSEX 47 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளன. கடந்த 8 வாரங்களாக நமது சந்தைகள் ஏற்றத்துடனே முடிந்துள்ளது. நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது. எனவே கண்மூடித்தனமாக SHORTSELLING செல்லவதை தவிர்த்து நல்ல A GROUP பங்குகளாக வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. வரும் வாரத்தில் வாங்கி விற்று வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது. F&0 செய்வதை தவிர்க்கவும்.


          நான் கடந்த 6 வருடங்களாக பங்குச்சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளேன் இவற்றில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன், தினமும் கற்றுக்கொண்டும் இருக்கிறேன். என் அனுபவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது TECHNICALS தெரியாமல் தினவர்தகமும், FUNDAMENTAL ANALYSIS தெரியாமல் முதலீடும் செய்பவர்கள் இறுதியில் நஷ்டத்தையே அடைகிறார்கள், அவ்வாறு செய்பவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை சந்தையின் மீது சுமத்துகின்றனர். தங்களது தகுதியை வளர்த்துகொள்வதற்கு இவர்கள் ஒருபோதும் முயலுவதில்லை.  ஆனாலும் உற்சாகமாக ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வர்த்தகம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் சொல்வது லாபத்திற்காக மட்டும் பாடுபடுங்கள், பணத்தின் மதிப்பை அறிந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.

  

1 comment:

பல்லவர்கள் said...

நான் உங்களுடைய ப்ளாகை தொடர்ச்சியாக தமிழ் மணத்தில் பார்த்து வருகிறேன். பயனுள்ள தகவல்களை நீங்கள் அளித்து வருகிறீர்கள். மேலும் சந்தையில் பணம் எடுப்பது எளிதாக உள்ளது.ஆகையால் அனைவரும் ப்ளாக்கைப் பார்வையிட பரிந்துரைக்கிறோன்