Sunday, April 11, 2010

           கடந்த 9 வாரமாக தொடர்ந்து நமது சந்தை ஏற்றதையே சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. NIFTY 71 புள்ளிகள் உயர்ந்து 5362 என்றப் புள்ளியிலும், SENSEX 241 புள்ளிகள் உயர்ந்து 17933 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தையான NASDAQ மற்றும் DOW சந்தைகள் நல்ல ஏறுமுகத்தில் உள்ளன. அங்கு ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது அதற்கு காரணமாக அங்கு வெளியாகிக்கொண்டுள்ள DATAக்களின் RESULTS மிகவும் எதிர்பார்பிற்கு மிஞ்சி வெளிவந்துகொண்டுள்ளதே ஆகும். DOWவிற்கு 10800 மிக நல்ல மற்றும் குறுகிய கால SUPPORT புள்ளிகளாகவும், 11000 என்பது நல்ல RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. இதில் எந்தப்புள்ளி CLOSINGBASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் நகர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது.

          கடந்த 9 வாரங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த லாபம் நிச்சயம் கிடைத்திருக்கும், ஆனால் எத்தனை பேர்  லாபம் ஈட்டி இருக்கிறார்கள்?  சந்தை சிறிது ஏறிவிட்டால் உடனே கண்மூடித்தனமாக SHORT SELLING சென்று விடுகிறார்கள். நமது சந்தைக்கு இன்னமும் நல்ல ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, அதற்கு காரணமாக RELIANCE, SBIN, TATASTEEL, ICICIBANK, BHEL, HDFC, HDFCBANK போன்ற HEAVY WEIGHT பங்குகள் POSITIVEவாக உள்ளதும், உலக சந்தைகள் நல்ல ஏறுமுகத்துடனும் உள்ளதால் நமது சந்தையில் திடீர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது, FIIகள் தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். எனவே கண்மூடி தனமாக SHORT SELLING செல்லவதை விட்டு விட்டு இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு. நிறைய நபர்களுக்கு தினவர்த்தகத்திற்கும், முதலீடுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிவதில்லை. தினவர்த்தகத்தில் வாங்கிய பங்குகள் விலை குறைந்துவிட்டால் அதை DELIVERY எடுத்துக்கொள்கின்றனர் இது எவ்வளவு அபாயம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. TECHNICALS அறிந்து தினவர்த்தகமும், FUNDAMENTAL ANALISYS அறிந்து முதலீடும் செய்யுங்கள். வீணாக பணம் செலவு செய்து குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்திகளை நம்பி வர்த்தகம் அல்லது முதலீடு செய்யவேண்டாம். உங்கள் லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நீங்களே பொறுப்பு, உங்கள் பணத்தின் மதிப்பு தெரியாமல் பங்குச்சந்தை பக்கம் வராதீர்கள். பணத்தை இழக்காதீர்கள்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான JPASSOCIAT அதன் BUY ABOVE வான 155 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடக்கவில்லை.எனவே இந்த வாரம் அது 155 கடந்தால் வாங்கலாம் அதன் இலக்குகளை அடையும். PFC அதன் இலக்குகளை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  

       

3 comments:

பல்லவர்கள் said...

சிறந்த ஆலோசனை. வரும் வாரங்களில் பயன்படுத்துகிறேன். ச.ர லோகநாதன் கசடற குழுமம்

பல்லவர்கள் said...

சிறந்த ஆலோசனை. வரும் வாரங்களில் பயன்படுத்துகிறேன். ச.ர லோகநாதன் கசடற குழுமம்

iswari said...

YOUR RECOMMENDATIONS ARE VERY GOOD