Sunday, March 28, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த RCOM பங்கானது அதன் BUY ABOVEவான 169க்கு மேல் 173.80 அல்லது 2.85% வரை சென்று லாபம் கொடுத்துள்ளது. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு PFC இந்திய அரசாங்க துறையை சேர்ந்த தரமான மின்துறை நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. PFC பங்கானது 265 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 270-275 புள்ளிகள் உள்ளன, STOPLOSS 260 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

          கடந்த வாரம் NIFTY 19 புள்ளிகள் உயர்ந்து 5282 என்றப்புள்ளியிலும், SENSEX 67 புள்ளிகள் உயர்ந்து 17645 என்றப் புள்ளியிலும் வலுவாக முடிந்துள்ளது.நமது சந்தை கடந்த 7 வாரங்களாக ஏற்றத்துடனே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது NIFTYயின் RSI 70 என்று OVERBOUGHT நிலையிலேயே உள்ளது, இருப்பினும் வரும் வாரத்தில் சந்தையில் சிறு சரிவுகள் இருந்தால் அதை முதலீடு வாய்ப்பாகவே பாருங்கள். நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் உள்ளது என்பதை OPEN INTEREST போன்ற TECHNICAL கூறுகள் சொல்கிறது. எனவே கண்மூடித்தனமாக SHORTSELLING செல்வதை விடுத்தது தரமான A GROUP பங்குகளை வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. NIFTY FUT SL 5180 வைத்துக்கொண்டு LONG செல்லலாம் இலக்காக 5300- 5400 உள்ளது.

          உலக நிகழ்வுகளாக NASDAQ மற்றும் DOW சந்தையானது 17 மாத உச்சத்தில் உள்ளன, ஜப்பான் பங்குச்சந்தையான NIKKEI மற்றும் தைவான் பங்குச்சந்தையும் 52 வார உச்சத்தில் உள்ளன வேறு எந்த கெட்ட செய்தியும் வரும் வாரத்தில் இல்லாத பச்சத்தில் நமது சந்தையிலும் புது உச்சங்களை காணலாம்.

No comments: