Sunday, March 21, 2010

          கடந்த வாரத்தில் NIFTY 171 புள்ளிகள் உயர்ந்தும், SENSEX 412 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களாக நமது சந்தை தொடர்ந்து ஏற்றதையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமாக RELIANCE, ICICIBANK, BHARTIARTL, INFOSYSTCH, TATASTEEL போன்ற HEAVY WEIGHT பங்குகள் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றம் கண்டதே காரணம்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த HCLTECH பங்கானது 370க்கு மேல் 383.25 வரை சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தவாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RCOM இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் தொலைபேசி துறையில் உள்ள தரமான நிறுவனமாகும். இதன் பங்கில் DOUBLE BOTTEM என்ற உருவமைப்பு உடைபட்டுள்ளது. அதாவது RCOM பங்கு 169 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 172-176 என்ற புள்ளிகள் உள்ளன. STOPLOSS 165 என்றப்புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். RCOM CHARTஐ கீழே காணலாம்.
 

          NIFTYயின் RSI 74 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது. RESERVE BANK OF INDIA வெள்ளிக்கிழமையன்று REPO மற்றும் REVERSE REPO விகிதத்தை முறையே 0.25% உயர்த்தியுள்ளது. வெள்ளியன்று DOW 37 புள்ளிகளும் NASDAQ 17 புள்ளிகளும் குறைந்து முடிந்துள்ளது. இருப்பினும் நமது சந்தையில் FIIS தங்களது முதலீடுகளை தொடர்ந்துகொண்டுள்ளனர், RELIANCE, SBIN போன்ற HEAVY WEIGHT பங்குகள் POSITIVEவாக உள்ளன. எனவே வரும் வாரத்தில் சிறு இறக்கங்கள் இருந்தாலும் இறக்கங்களை முதலீடு வாய்பாகவே பார்க்கலாம். NIFTY 5300 என்றப்புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 5500 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது.

No comments: