Sunday, March 7, 2010

          கடந்த வாரம் NIFTY 166 புள்ளிகள் உயர்ந்து 5089 என்ற புள்ளியிலும், SENSEX 565 புள்ளிகள் உயர்ந்து 16995 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTYயானது 4950-5150 என்ற இருபுள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபடுகிறதோ அந்த திசையில் வரும் வாரத்தில் நகர்வுகள் இருக்கலாம். அமெரிக்க சந்தையானது வெள்ளியன்று நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது, அங்கு வெளியான JOBLESS DATA எதிர்பார்பிற்கு மிஞ்சி வந்ததே NASDAQ மற்றும்  DOW உயர்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது. நமது சந்தைக்கும் எந்த கெட்ட செய்தியும் இல்லை வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் நல்ல ஏற்றத்தை  எதிர்பார்க்கலாம். 

          இந்த வாரம் நான் பரிதுரைக்கும் பங்கு HCLTECH. CHENNAIஐ தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் HARDWARE மற்றும் SOFTWARE ஏற்றுமதி செய்யும் தரமான நிறுவனம். NIFTY மற்றும் SENSEXல் உள்ள BLUECHIP நிறுவனமாகும், இந்தப்பங்கு 370 என்றப்புள்ளியை CLOSINGBASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 378-388 உள்ளது, STOPLOSS 355 என்றப்புள்ளியை வைத்துக்கொள்ளலாம். நீண்டகால முதலீடுக்கும் ஏற்ற பங்கு HCLTECH.  இதன் CHARTஐ கீழே காணலாம்.

No comments: