Saturday, November 14, 2009

           வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது NASDAQ 18 புள்ளிகள் உயர்ந்து 2168 புள்ளியிலும் , DOW  73 புள்ளிகள் உயர்ந்து 10270 புள்ளிகளில் முடிந்துள்ளது. உலக முக்கிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்துடனே முடிவடைந்துள்ளது. பெரியதாக எந்த கெட்ட செய்திகள் இருப்பதாக தெரியவில்லை, எனவே நமது சந்தையிலும் இதே ஏறுமுகம் தொடரலாம் என்று நம்பலாம்.

           TECHNICALலாக IT, AUTO துறைகள் மிகப்பெரிய ஏற்றத்திற்கு தயாராக உள்ளதாக தெரிகிறது. IT INDEX CHARTஇல DOUBLE BOTTEM BREAK OUT ஆகி உள்ளது, இது பெரிய ஏற்றத்திற்கு கொண்டு செல்லலாம். BSE AUTO INDEX 6800 என்ற புள்ளிக்கு மேல் CLOSE ஆகும் பட்சத்தில் அதற்கும் மிகபெரிய ஏற்றம் நிச்சயம் உண்டு.

           பங்குகளில் RELIANCE, INFOSYSTCH, TCS, WIPRO, MARUTI, HEROHONDA, BHEL, SESAGOA, SAIL, IDFC, GRASIM, HINDUNILVR, IDBI, ACC போன்ற பங்குகள் TECHNICALஆக மிகவும் வலிமையாக உள்ளன.

            நான் என் நண்பர்களுக்கு சொல்வது கண்மூடி தனமாக இரண்டு நாள் சந்தை ஏற்றம் கண்டால் SHORT செல்வது அல்லது PUT OPTION எடுப்பது, அதே சந்தை இரண்டு நாட்கள் இறக்கம் கண்டால் LONG செல்வது அல்லது CALL OPTION எடுப்பது மிகவும் தவறான முறையாகும். சந்தையின் அலையுடனே சென்றால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யவும். முதலீடுக்காகவும் தனியே பணம் ஒதுக்கவும். TRADING மட்டுமே எந்த காரணம் கொண்டும் செய்யவேண்டாம். குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்ய பழகவும். உதாரணமாக 1000 பங்குகள் வாங்கி 1 ருபாய் லாபத்திற்கு விற்பதை விட, 100 பங்குகள் வாங்கி 10 ருபாய் தள்ளி கொடுக்க பழகுங்கள். இது பயிற்சி மற்றும் TECHNICALS தெரிந்தால் மட்டுமே முடியும்.   

1 comment:

VIVEK said...

YOUR ADVISE WILL BE VERY USEFUL TO ME FRIEND KEEP IT UP