Sunday, November 29, 2009

            சென்ற வாரம் ACC பங்கில் BULLISH BREAK OUT பற்றி சொல்லிருந்தேன். அது சென்ற வார உச்ச விலையான 817 தொட்டது. இந்த வாரம் நான் சொல்லும் பங்கு RANBAXY. இந்தியாவின் மிகப்பெரிய PHARMA COMPANYகளில் ஒன்று. நல்ல லாபத்துடன் இயங்கும் ஒரு நேர்மையான நிர்வாகம் கொண்ட நிறுவனமாகும். இந்த பங்கு 450ஐ CLOSING BASIS முறையில் கடக்கும் போது வாங்கலாம் இலக்காக 475-500 உள்ளது. STOPLOSS 437 CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். இது நீண்டகால முதலீடுக்கு மிகவும் ஏற்றப்பங்காகும். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


      சென்ற வாரம் NIFTY 110 புள்ளிகள் குறைந்து முடிந்துள்ளது. DUBAI நிதிச்சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியே இந்த சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சந்தை ஏற்ற நிலையில் இருக்கும் போது நல்ல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சந்தை சரியும் போது கெட்ட செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சிறுமுதலீட்டாளர்கள் ஒவ்வொரு செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது நட்டத்தையே சந்திக்க நேரிடுகிறது, அல்லது முதலீடு வாய்ப்பு கைநழுவி போய்விடுகிறது. ஒவ்வொரு முறை சந்தை சரியும் போதும் சிறிது சிறிதாக முதலீடைத் தொடர மறவாதீர். A GROUP பங்குகளை மட்டுமே வாங்கவும், மீண்டும் சொல்கிறேன் விலை அதிகம் உள்ளப்பங்கு அதிகமாகவும், விலைக்குறைவாக உள்ளப்பங்கு குறைவாகவும் சரியும் என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தரமான பங்குகள் வீழும்போது வேகமாகவும், எழும்போது அதைவிட வேகமாகவும் எழும். OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை தேர்வுசெய்து சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள். TRADING மட்டும் செய்பவர்கள் இறுதியில் நட்டத்தையே  அடைகிறார்கள். மாறாக தரமான பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறைந்த நட்டத்தையும் மிக அதிக லாபத்தையும் பெறுகிறார்கள். வாழ்த்துக்கள்

No comments: