Sunday, November 22, 2009

          ACC இந்தியாவின் மிகப்பெரிய CEMENT தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. NIFTY, மற்றும் SENSEX INDEXல் உள்ள BLUE CHIP பங்காகும். நல்ல லாபத்துடன் இயங்கும் நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது 771 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் ACCக்கு நல்ல ஏற்றம் உள்ளதாக தெரிகிறது. இலக்காக 808-855-900 உள்ளது. இதற்கு STOPLOSS 747 ஆகவும் உள்ளதாக தெரிகிறது. ACCன் BREAKOUT CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


       வரும் வாரங்களில் நமது சந்தை அதிக VOLATILEலுடன் இருக்கலாம், எனவே TRADING செய்வதை குறைத்துக்கொண்டு குறுகிய கால முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். முதலீடு வாய்ப்பை முதலாவதாகவும் TRADING செய்வதை இரண்டாவதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், இந்த வழிமுறையே அதிக லாபத்தைக்கொடுக்கும்.   குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். சந்தைகள் உச்சத்தில் இருப்பதால் F&O செய்வதை தவிர்க்கலாம். அதற்கு பதில் OPTIONS செய்வது நல்லது. உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு தெரிந்தும், உங்களிடம் உள்ள பணத்திற்கு மட்டுமே வர்த்தகம் செய்ய பழகுங்கள். அதிக EXPOSURE வேண்டாம் . சிலர் குறைந்த விலையுள்ள பங்குகள் RISK குறைவு என்று தவறாக கருதுகிறார்கள் உதாரணமாக, SBIN அதன் உச்ச விலையான 2500ல் இருந்து 2058 வரை அதாவது 18% மட்டுமே குறைந்தது, மாறாக UNITECH 116 என்ற அதன் உச்ச விலையில் இருந்து 74 அல்லது 36% சரிந்துள்ளது. நீங்கள் UNITECHகிற்கு பதில் SBIN பங்கில் முதலீடு செய்திருந்தால் உங்கள் நட்டம் மிகக்குறைவு கவனித்து ஒவொவொரு முறையும் OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யவும்.

1 comment:

Abdullah said...

Yes I accept your words, I have got big loss in UNITECH it doing underperform till now. Plz tell us how to find outperform shares? Plz write an article about that, it will useful to us.