Sunday, July 29, 2012

சந்தை வீழ்ச்சியிலும் சரியாத பங்குகள்(bucking the trend)

           நமது பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக பெரியதாக உயராத பொழுதும் பல நல்ல நிலையில் நிர்வகிகப்படும் நிறுவனங்களின் பங்குகளை கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, இதுபோன்ற பங்குகளை தேர்வு செய்து வாங்கினால் நஷ்டம் குறைவாகவும் லாபம் அதிகமாகவும் ஈட்ட முடியும். உங்களுக்காக சில நல்ல பங்குகளை கீழே கொடுத்துள்ளேன்.

HINDUNILVR ( HINDUSTAN UNILEVER)

          FMCG துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் தரமான நிறுவனம். Fundamental மற்றும் Technical  இந்த இரண்டு ரீதியாகவும் மிகவும் பலமாக உள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.





HDFC BANK
 
          தனியார் வங்கியில் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி, மேலும் வரா கடன் மிகவும் குறைவாக உள்ள நிறுவனம்.தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.
 


POWERGRID

          பொதுத்துறையை சேர்ந்த மின்பகிர்மானம் துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம். கொழுத்த லாபத்துடன் இயங்கும் நிறுவனமும் கூட. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு DIVIDEND கொடுத்துவரும் BLUE CHIP நிறுவனமாகும். TECHNICALஆக இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. அதை கீழே கோடிட்டு காட்டியுள்ளேன். 115க்கு மேல் 120-150 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.

 ITC (INDIAN TOBBACO COMPANY)

          25 வருடங்களுக்கு மேல் நல்ல நிலையில் இயங்கிவரும் தனியார் துறையை சேர்ந்த FMCG, PAPER, CIGARETTE, HOSPITALITY போன்ற MULTIBUSINESS துறையை சேர்ந்த மிக தரமான பங்கு. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.



TCS ( TATA CONSULTANCY SERVICES)

          இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் (SOFTWARE) நிறுவனம், மேலும் TATA குழுமத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பிரம்மாண்டத்தின் உச்சம். தொடர்ந்து நல்ல DIVIDENDஐ இதன் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டுள்ள நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.




ACC (ASSOCIATED CONSTRUCTION COMPANY)


            நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனம். தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. 1100 விலைக்கு அருகில் வரும்பொழுது வணங்கலாம்.




மேல் சொன்ன பங்குகளை தவிர பல LARGECAP, MIDCAP மற்றும்  SMALLCAP பங்குகள் TECHNICALலாக நல்ல நிலையில் உள்ளன அவற்றையும் கீழே கொடுத்துள்ளேன்.

APOLLOHOSP, CUB(CITY UNION BANK), MRF, APOLLOTYRE, BAJAJ-AUTO, SUNPHARMA, LUPIN, MARICO, THANGAMAYL, TITAN, YESBANK, VGUARD, TTKPRESTIGE, DRREDDY, DIVISLAB போன்ற பங்குகள் மிகவும் பலமாக உள்ளன. இவற்றை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். முடிவு உங்களுடையதாக இருக்கட்டும், யார் சொல்வதையும் அல்லது எந்த குறுஞ்செய்திகளையும் நம்பி நட்டமடைய வேண்டாம்...

No comments: