Saturday, August 6, 2011

தரை தட்டிய A குரூப் பங்குகள்

          உலக பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக பெருமளவு சரிந்துள்ளது. நமது சந்தையும் குறிப்பிடதக்க அளவு சரிந்துள்ளது. இவற்றில் நிறைய நல்ல A குரூப் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளது, சொல்லப்போனால் கரை தட்டிய கப்பல் போல் கரை தட்டிய பங்குகளாக தற்பொழுது உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தினவர்த்தகம் செய்வதை குறைத்துக்கொண்டு இந்தப்பங்குகளில் சிறிது சிறிதாக முதலீடு செய்வது சிறந்தது.


          SBIN, INFY, RELIANCE, JINDALSTEL, SESAGOA, LT, IDBI, IDFC, ICICIBANK, JSWSTEEL, TATASTEEL, HINDALCO, CANBK, TCS, HCLTECH, EDUCOMP, NTPC, POWERGRID, GAIL, SAIL, PNB, PFC, PTC, RECLTD போன்றப் பங்குகள் மிகவும் OVERSOLD நிலையில் உள்ளன. இவற்றில் தேர்ந்தெடுத்த பங்குகளை சிறிது சிறிதாக வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

           சந்தை இவ்வளவு சரிந்த நிலையிலும் சில A குரூப் பங்குகள் அதன் RESISTANCE புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகமாகிக்கொண்டுள்ளன, சந்தையில் இறக்கம் முடிந்து திரும்பும்பொழுது இந்தப்பங்குகள் பெருமளவு ஏற்றம் அடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
           
           BHARTIARTL, IDEA, ITC, HINDUNILVR, PETRONET, BANKBARODA, ABB, SIEMENS, BAJAJ-AUTO, TITAN, CHAMBLFERT, TATAPOWER, HDFCBANK, HDFC போன்ற A குரூப் பங்குகளை கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, எனவே சந்தை சிறிதளவு ஏற்றம் அடைந்தால் இந்தப் பங்குகள் நன்கு ஏற வாய்ப்புள்ளது இந்தப்பங்குகளையும் சிறிது சிறிதாக வாங்கி சேர்க்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

No comments: