Sunday, May 9, 2010

வரும் வார நிகழ்வுகள்

          கடந்த வாரத்தில் NIFTY 260 புள்ளிகள் குறைந்து 5018 என்றப் புள்ளியிலும், SENSEX 790 புள்ளிகள் குறைந்து 16769 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTYக்கு 4950 என்றப் புள்ளி மிகப் பெரிய கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்த புள்ளி வலுவாக CLOSING BASIS முறையில் உடைபட்டால் 4675-4500 அடுத்தடுத்த இலாக்காக உள்ளன. நமது சந்தை அப்படியே மேல் நோக்கி சென்றாலும் 5180 என்றப் புள்ளியை தாண்டுவது மிகவும் கடினம். எனவே பெரிய இறக்கங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யத் தொடங்குங்கள், A குரூப் பங்குகளை மட்டும் வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. வரும் வாரம் பெரும்பாலும் இறக்கத்துடன் அல்லது உலக சந்தையை பொறுத்தே நமது சந்தையும் இருக்கலாம். எனவே தினவர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள், வரும் வாரத்தில் பெரும்பாலான தினங்கள் விற்று வாங்கவே வாய்ப்பு இருக்கலாம்.

          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு ICICIBANK. இதன் பங்கில் BEARISH BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது இந்தப் பங்கு 856 என்றப் புள்ளியை கீழ்நோக்கி CLOSING BASIS முறையில் கடந்தால் தாராளமாக SHORT SELLING செல்லலாம் இலக்காக 800-775 புள்ளிகள் உள்ளன, STOPLOSS 890 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

No comments: