Sunday, May 2, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 26 புள்ளிகள் குறைந்து 5278 என்றப் புள்ளியிலும், SENSEX 135 புள்ளிகள் குறைந்து 17559 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது அதாவது 5180-5300 இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்தப் புள்ளி வலிமையாக உடைபடுகிறதோ அந்த திசையில் வரும்வாரம் நகர்வுகள் இருக்கலாம்.

          வரும் வார நிகழ்வுகளாக நமது நாட்டின் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது (16%), பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்துள்ளன என்பது சாதகமான செய்திகளாகவும், அமெரிக்க பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிந்து முடிந்துள்ளது பாதகமான செய்தியாகவும் உள்ளன. நமது சந்தை வரும் வாரத்தில் உலக சந்தைகளை பொறுத்தே அமையும் என்பது என் கருத்து. முதலீட்டாளர்கள் புதிய முதலீடை தற்பொழுது செய்யவேண்டாம் சிறிது காலம் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்பு நிச்சயம் உண்டு.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான RPOWER அதன் முதல் இலக்கை தாண்டி சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் வாரத்தில் தினவர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வரும் வாரத்தில் பெரும்பன்மையான நாட்கள் விற்று வாங்கி லாபம் ஈட்ட அதிக வாய்ப்பிருக்கலாம்.

          F&O LOT SIZE மற்றப்பட்டுள்ளது அவற்றை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.
http://www.nse-india.com/ 

No comments: