Sunday, December 27, 2009

         கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் இரண்டு இலக்குகளையும் தொட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வாரம் NIFTY மற்றும் SENSEX INDEXஇல் TOP GAINER SAIL. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு SUZLON. காற்றாலை மின்சாரம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனமாகும். கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த போதிலும், வரும் காலாண்டுகளில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இதன் கடன் சுமை கணிசமாக குறைந்துள்ளது. SUZLON பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்த பங்கு 91 என்றப்புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 97-105 உள்ளது. STOPLOSS 85 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம்.

   
       கடந்த வாரத்தில் NIFTY 191 புள்ளிகள் உயர்ந்து 5178.40 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை பார்ப்போம், நமது நிதிஅமைச்சர் 10% GDP வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி சில அரசு துறை நிறுவனங்களுக்கு MAHA RATNA அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். FIIகள் நமது சந்தையில் தங்களது முதலீடை தொடர்ந்து செய்து  கொண்டுள்ளனர். JAPAN பங்குச்சந்தை குறியீடான NIKKEI 3 மாத உச்ச புள்ளியை அடைந்துள்ளது, AMERICA சந்தையான NASDAQ 52 வார உச்ச புள்ளியை தொட்டுள்ளது. நமது சந்தைக்கும் கெட்ட செய்திகள் எதுவும் இல்லை, வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.

      என் நண்பர்களுக்கு நான் என்றும் சொல்வது குறைந்த VOLUMEல் TRADINGம், அதிக அளவில் முதலீடும் மட்டுமே அதிக லாபம் தரும். OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து துறைகள் வாரியாக உங்கள் முதலீடை தொடருங்கள். A GROUP பங்குகளிலேயே நல்ல லாபம் ஈட்ட முடியும், மற்ற பங்குகளில் கவனம் வேண்டாம். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டாம், சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் F&O செய்வதை தவிர்க்கவும்.  அவசரம், பதட்டம், பேராசை  இவைகளே உங்களை சந்தையின் போக்கிற்கு எதிராக அழைத்துசெல்லும் எனவே கவனமாகவும் பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள், உங்களது மனநிலையை உங்கள் கட்டுக்குள் வைத்து செயல்படுங்கள். உங்கள் லாபத்திற்கு என் வாழ்த்துக்கள். 

No comments: