Sunday, December 13, 2009

            சென்ற ஞாயற்றுக்கிழமை நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் BUY ABOVEவான 215க்கு செல்லவில்லை. சென்றவாரம் SAILஇன் உச்ச விலை 213.90 ஆகும். எனவே இந்தவாரமும் நான் SAIL பங்கையே பரிந்துரை செய்கிறேன். 215 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 227-240ம் உள்ளன. STOPLOSS 200  என்றப்புள்ளியை CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். SAILஇன் CHARTஐ கீழே காணலாம்  



       சென்ற வாரம் NIFTY 8.5 உயர்ந்து 5117.3 என்ற புள்ளியிலும், SENSEX 18 புள்ளிகள் உயர்ந்து 17119 என்றப்புள்ளியிலும் முடிந்துள்ளது. அதாவது பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 5050-5160 என்றபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. 5160க்கு மேல் NIFTYயானது கடைசியாக 5/5/2008 அன்று முடிந்துள்ளது, தற்பொழுது இந்தப்புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் 5300 என்பது அடுத்த இலக்காக உள்ளது.இதை அறிந்து வர்த்தகம் செய்யவும்.

        பங்குச்சந்தை நமக்கு பணம் ஈட்ட அற்புதமான பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. நாம் தான் கண்மூடிதனமாக, ஒரு வரைமுறையில்லாமல் வர்த்தகம் அல்லது INVESTMENT செய்து நட்டத்தை சந்திக்கிறோம். நம் லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நாமே பொறுப்பு, எனவே கவனம் மிகஅவசியம். பங்குச்சந்தையில் ஈடுபட உங்களுக்கு சிலப்பயிற்சிகள்  தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். INVESTMENT செய்ய அடிப்படை பகுப்பாய்வையும், TRADING செய்ய தொழில் நுட்ப பகுப்பாய்வையும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று ஏதோ ஒரு பங்கை வாங்காதீர்கள். A GROUP பங்குகளிலேயே பல நல்ல வாய்ப்புக்கள் உள்ளன தவறவிடாதீர்கள் அதற்கு ECONOMIC TIMES, BUSINESSLINE போன்ற நாளேடுகளை படியுங்கள். அவர்கள் தினமும் பரிந்துரை செய்யும் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். யாரோ அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்தி உங்களுக்கு லாபம் தராது. உங்கள் பணத்தை பாதுகாக்க நீங்கள் சில தகுதிகளை பெற்றிருக்கவேண்டியது அவசியம். மொத்தத்தில் உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை அறிந்து வர்த்தகத்தில் ஈடுபடுங்கள், தொடர்ந்து நட்டம் வருகிறதென்றால் அந்த தொழில் செய்வதில் பிரயோஜனம் உள்ளதா என்று யோசியுங்கள், உங்களுக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். அடிக்கடி உங்களை நீங்களே சுயப்பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு லாபம் வருவதற்கு என் வாழ்த்துக்கள்.

1 comment:

சதீஷ் said...

நீங்கள் சொல்வது போல் நமது லாபம் மற்றும் நட்டத்திற்கு நாமே பொறுப்பு, இனி நான் கவனித்து செயல்படுகிறேன்
நன்றி