Sunday, May 29, 2011

குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது!!!

           வங்கி மற்றும் டெக்னாலஜி துறைகளில் முக்கிய உருவமைப்பு (PATTERN)உருவாகியுள்ளது, எனவே அதை இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 

           முதலில் டெக்னாலஜி துறை - இதன் CHARTல் HEAD AND SHOULDERS என்கிற முக்கிய PATTERN உருவாகியுள்ளது, அதன்படி CNX-IT இன்டெக்ஸ் ஓரிரு நாட்கள் 6500 புள்ளிக்கு கீழ் வலுவாக முடிவடைந்தால், இந்தத்துறை 6000 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளது. சிறிது TECHNICALS அறிந்தவர்கள் 6500 என்றப் புள்ளியை STOPLOSSஆக வைத்து இந்த இன்டெக்ஸ் அல்லது இந்தத் துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. டெக்னாலஜி இன்டெக்ஸ் CHARTஐ மேலே கொடுத்துள்ளேன்.

          வங்கித்துறை - இதன் CHARTல் DOUBLE TOP PATTERN உருவாகியுள்ளது. BANKNIFTYக்கு 10000 என்ற புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளி ஓரிரு தினங்கள் உடைப்பட்டால் 9000-8000 வரை சரிய வாய்ப்புள்ளது. TECHNICALS அறிந்தவர்கள் 10000 என்றப் புள்ளியை STOPLOSSஆக வைத்து BANKNIFTY அல்லது இந்தத் துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. டெக்னாலஜி இன்டெக்ஸ் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

No comments: