Sunday, January 23, 2011

வரும் வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

          வியாழனன்று சந்தை மேலும்,கீழுமாக இருந்தாலும், முடிவாக,100 புள்ளிகள் உயர்வுடன்,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' முடிந்தது. காரணம், பணவீக்கம் சற்றுகுறைந்திருக்கிறது என்ற செய்திதான். அதேசமயம், இந்த வாரம்,உணவுப் பொருட்கள் பணவீக்கம், 15.51 சதவீதமாக இருந்தது.நாட்டின் பணவீக்கம் குறைவதால்,வரும் 25ம் தேதி, ரிசர்வ்வங்கி ஆய்வுக் கூட்டத்தில் வட்டிவிகிதங்கள் அதிகமாக கூட்டப்படாது என்ற நம்பிக்கையில், வங்கிப் பங்குகள் மேலே சென்றன.இது, சந்தையை, 68 புள்ளிகள்கூட்டியது.மேலும், மைக்ரோபைனான்ஸ் கம்பெனிகளுக்குரிசர்வ் வங்கி கொடுத்த சிறிய உயிரால், எஸ்.கே.எஸ்., மைக்ரோபைனான்ஸ், கடந்த இரண்டு நாட்களில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக மேலே சென்றது. தடையில்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது முன்னணி சாப்ட்வேர்பங்குகள்.குறிப்பாக, டி.சி.எஸ்., அதாவதுஅதன் நிதிநிலை முடிவுகள்வந்த தினத்தில் இருந்து, நல்லமுன்னேற்றங்களை கண்டுள்ளது.மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம், 6.5 சதவீதத்திற்கு வரும் என,மாண்டேக் சிங் அலுவாலியாதெரிவித்துள்ளார்.இதை விட ஆச்சரியமான விஷயம், கடந்த பல நாட்களுக்குபிறகு, பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றதைவிட, வாங்கியது அதிகமாகஇருந்தது. அதாவது, 170 கோடிரூபாய் மதிப்பிற்கு பங்குகளைவாங்கினர். இதை விட சந்தோஷமான செய்தி என்னவாக இருக்கமுடியும். பல நாட்கள் காணாமல்போன பையன் கிடைத்ததுபோலத்தான்.வெள்ளியன்று சந்தை மேலும்,கீழுமாக இருந்தது. இறுதியாகமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 39 புள்ளிகள்குறைந்து, 19,007 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 18புள்ளிகள் குறைந்து, 5,700 புள்ளிகளுடனும் முடிந்தது.மொத்தமாக இந்த வாரம், லாபவாரமாகவே இருந்தது. அதாவது,பல வாரங்களுக்கு பிறகு, சந்தைலாபத்தில் முடிந்துள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள்:2010ம் ஆண்டை எதற்கு கொண்டாடுகிறோமோ இல்லையோ,வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,இந்திய சந்தைகளில் அதிகளவில்முதலீடு செய்துள்ளனர். அதைகொண்டாட வேண்டும்.அதாவது, கடந்தாண்டு மட்டும், 1,33,000 கோடி ரூபாயை இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுசெய்துள்ளனர். இது ஒரு சாதனைஅளவாகும். இது தான் கடந்தாண்டு சந்தையை உச்சத்திற்குகொண்டு சென்றது.காலாண்டு முடிவுகள்: வந்துகொண்டிருக்கும் நிறுவனங்களின்காலாண்டு முடிவுகள் நன்றாகவேஉள்ளன. இது, சந்தைக்கு ஒருநல்ல செய்தி. வங்கிப் பங்குகளின்காலாண்டு முடிவுகளும் நன்றாகஇருக்கின்றன. இது, சந்தைக்கு சாதகமான ஒன்று.ஆனால், அடுத்த காலாண்டுமுடிவுகளும் வங்கிகளுக்கு இப்படியே இருக்காது. ஏனெனில் வங்கிகள் சென்ற காலாண்டின் இறுதியிலும், இந்த காலாண்டின் ஆரம்பத்திலும் வட்டி விகிதங்கள் கூடிவருவதால் வங்கிகள் லாப வரம்புஇடர்ப்பாட்டால் தவிக்கின்றன.மேலும், பணத்தட்டுப்பாடுஇருப்பதால், அதிக வட்டிகொடுத்து டிபாசிட்களை வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதுவும் ஒரு காரணம். இதுவரைவந்துள்ள, 253 கம்பெனிகளின்காலாண்டு முடிவுகளை வைத்துப்பார்க்கும் போது, 2009ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டை விட,2010ம் ஆண்டின் மூன்றாவதுகாலாண்டில், நிறுவனங்களின்லாபம், 24 சதவீதமும், விற்பனை,26 சதவீதமும் சராசரியாக கூடியுள்ளது.புதிய வெளியீடுகள்: டாடாஸ்டீல் நிறுவனத்தின் இரண்டாவதுபங்கு வெளியீடு, 21ம் தேதிமுடிந்தது. மொத்தமாக, 5.13மடங்குகளுக்கு பங்குகள்வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 1.60 மடங்கிற்கு பங்குகள்வேண்டி விண்ணப்பங்கள்வந்துள்ளன.இரண்டாவது நாள் வரை அதிகம் செலுத்தப்படாமல் தவித்துக்கொண்டிருந்த வெளியீடு, கடைசிதினத்தில் ஓரளவு நன்றாக செலுத்தப்பட்டிருந்தது. சிறிய முதலீட்டாளர்கள், இரண்டு லட்சம் வரைபோட்டிருந்தால், அவர்களுக்கு,200 பங்குகள் வரை கிடைக்கும்.தற்போது இருக்கும் விலையில், 4,000 ரூபாய் வரை லாபம்கிடைக்க வாய்ப்புள்ளது.அடுத்த வாரம் எப்படி இருக்கும்?அடுத்த வாரமும் பங்கு வர்த்தகம் மேலும், கீழுமாகத்தான்இருக்க வாய்ப்புகள் உள்ளன.ஏனெனில், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்றுசொல்ல இயலாது.மேலும், அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை, யூ.கே.யின்ஜி.டி.பி., டேட்டா, ஜப்பானின்வட்டி விகிதங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் வேறு வரும். நம்நாட்டின் பங்குச் சந்தைகள், உலகநிலவரங்களையும் வைத்தும்தானே மேலே, கீழே சென்று கொண்டிருக்கிறது. காத்திருந்துபார்ப்போம். நல்ல காலாண்டுமுடிவுகளும், வெளிநாட்டு பணவரத்தும் சந்தையை மேலேகொண்டு செல்லும். 
                                                                                                                                   நன்றி தினமலர் 

1 comment:

Anonymous said...

GOOD ARTICLE